சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

தளபதி 66 படத்தின் டைட்டில் இதுதான்.. வெடிக்கப் போகும் புதிய சர்ச்சை

விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளில் உருவாகும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜு தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

பிரபல தெலுங்கு தயாரிப்பாளரின் படத்தில் விஜய் நடிக்கிறார் என்றதுமே சில சர்ச்சை கருத்துக்கள் எழுந்தது. அதிலும் விஜய் நேரடி தெலுங்கு திரைப்படத்தில் முதன் முறையாக நடிக்கிறார். இதனால் தெலுங்குக்கு உள்ள முக்கியத்துவம் தமிழுக்கு கிடைக்காமல் போய்விடும் என்று பலரும் கூறி வந்தனர்.

ஆனால் இயக்குனர் வம்சி தமிழ் ரசிகர்களை திருப்திபடுத்தும் வகையில் தான் படம் இருக்கும் என்று குறிப்பிட்டு வந்தார். ஆனால் தற்போது வெளியாகியிருக்கும் ஒரு தகவல் அடுத்த பிரச்சனைக்கு வழி வகுக்கும் வகையில் இருக்கிறது.

அதாவது விஜய்யின் பிறந்த நாளன்று படக்குழு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்க போவதாக ஒரு தகவல் கடந்த சில நாட்களாக உலா வருகிறது. மேலும் அந்த தினத்தில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விஜய் பிறந்தநாளன்று படத்தின் தலைப்பை வெளியிட படக்குழு செய்துள்ளது.

அதன்படி இந்த படத்திற்கு வாரசுடு என்ற தலைப்பை முடிவு செய்துள்ளனர். இதை அப்படியே தமிழில் வாரிசு வைக்க இருக்கின்றனர். இப்படத்தில் குடும்ப சென்டிமென்ட் அதிகமாக இருக்கும் காரணத்தினால் தான் இந்தப் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் இதில் என்ன சர்ச்சை இருக்கிறது என்று உங்களுக்கு தோன்றலாம். இப்படம் பான் இந்தியா திரைப்படமாக மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் தயாரிப்பாளர் தெலுங்குக்கு ஏற்றவாறு தான் இப்படி ஒரு தலைப்பை முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் முதலில் தெலுங்கு தலைப்புதான் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் பிறகுதான் அதை தமிழில் மாற்றி இருக்கின்றனர். மேலும் இந்த தலைப்பு தமிழக அளவில் சில பிரச்சனைகளை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது. அதனால் இந்த படத்தின் டைட்டில் விவகாரத்தில் விஜய் சற்று நிதானமாக ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Trending News