புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

தோல்விக்கு அஞ்சாமல் மீண்டும் தலையை விடும் விஜய்.. தளபதி 68 இயக்குனரை லாக் செய்த சம்பவம்

விஜய், லோகேஷ் கூட்டணியில் தற்போது லியோ படம் உருவாகி வருகிறது. மாஸ்டர் பட வெற்றிக்கு பிறகு மீண்டும் இவர்கள் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் வருகின்ற அக்டோபர் மாதம் லியோ படம் ரிலீஸாக உள்ளது. இப்போது விஜய்யின் அடுத்த படம் குறித்து அரசல் புரசலாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே அட்லீ மற்றும் விஜய் மீண்டும் இணைவதாக தகவல் வெளியானது. ஆனால் இப்போது வேறு ஒரு இயக்குனரிடம் விஜய் கதை கேட்டுள்ளாராம். அதாவது ஏற்கனவே தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு படத்தில் விஜய் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை.

Also Read : கேரவன்க்குள்ளே விஜய் நண்பர்களை வச்சு செஞ்ச அஜித்.. பேட்டியில் உண்மையை உடைத்த சஞ்சீவ்

இப்போது மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விஜய் தேவர் கொண்டா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா விஜய்க்கு கதை எழுதி உள்ளாராம்.

மேலும் தளபதி இடம் இது குறித்து விவாதித்த போது படம் ரொம்ப பிரமாதமாக உள்ளதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த கதையை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் லியோ படம் முடியும் வரை காத்திருங்கள் என்று விஜய் கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக சந்தீப் ரெட்டி காத்திருக்கிறாராம்.

Also Read : இப்படி செஞ்சா லியோ படத்துக்கு நல்லது இல்ல.. லோகேஷ் நிறுத்தலைன்னா பாபாவிட மோசமான தோல்வி கன்பார்ம்

இப்போது ஹிந்தியில் அனிமல் என்ற படத்தை அவர் இயக்கி வருகிறார். அந்தப் படத்தை முடித்த கையோடு தளபதி 68 படத்தை சந்தீப் ரெட்டி இயக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் இதை அறிந்த ரசிகர்கள் இப்போது பயத்தில் உள்ளனர். ஏனென்றால் சமீபகாலமாக தெலுங்கு இயக்குனர்களை நம்பி டாப் நடிகர்கள் மோசம் போய் உள்ளனர்.

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், தனுஷின் வாத்தி, விஜய்யின் வாரிசு படங்கள் தமிழ் ரசிகர்கள் மத்தியில் செல்லுபடி ஆகவில்லை. இந்த சூழலில் மீண்டும் தெலுங்கு இயக்குனர் விஜய் என்ற அச்சத்தில் அவரது ரசிகர்கள் உள்ளனர். ஆகையால் விஜய் என்ன முடிவெடுக்கிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read : லியோ படத்தில் கண்டிப்பாக கமலஹாசன்.. சர்ப்ரைஸாக கொடுக்க இயக்குனர் போட்ட பிளான்.!

Trending News