வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வாயிலையே வடை சுடும் வெங்கட் பிரபு.. அப்சட்டில் இருக்கும் தளபதி-68 டீம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான கஸ்டடி படம் படுதோல்வி அடைந்தது. அதற்கு அடுத்தபடியாக விஜய்யை வைத்து தளபதி 68 படத்தை தொடங்க இருக்கிறார். எப்படி தளபதி வெங்கட் பிரபுவை தேர்ந்தெடுத்தார் என பலரும் குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனால் அஜித்துக்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது வெங்கட் பிரபு தான்.

ஆகையால் விஜய்க்கு ஏற்ற மாதிரி கதையை கண்டிப்பாக தயார் செய்து வைத்திருப்பார். தளபதி 68 படத்திற்கான டைட்டில் எல்லாம் செலக்ட் செய்து வைத்துள்ளார்களாம். விஜய்யின் பிறந்தநாள் அன்று டைட்டில் வெளியாக இருக்கிறது. இப்போது டைட்டில் சிஎஸ்கே என்று இணையத்தில் உலாவி கொண்டிருக்கிறது.

Also Read : தன்னைவிட அதிக வயதுடைய ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்த 5 படங்கள் .. விஜய் அஜித்துக்கும் இந்த நிலைமைதான்

அதுமட்டுமின்றி தளபதி 68 படத்தின் ஹீரோயின் திரிஷா, பிரியா பவானி சங்கர், பிரியங்கா அருள் மோகன், ஜோதிகா என பல நடிகைகளின் பெயர் அடிபட்டு கொண்டிருக்கிறது. குஷி படத்தின் பார்டு 2வாக தளபதி 68 இருக்கும் என்ற பேச்சும் போய்க்கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் வெங்கட் பிரபுவால் தளபதி 68 அப்சட்டில் இருக்கிறதாம்.

அதாவது வெங்கட் பிரபு போற இடமெல்லாம் சும்மா இல்லாமல் வாயை வைத்துக் கொண்டு வடை சுட்டு வருகிறார். தளபதி 68 படம் அப்படி இருக்கும், இப்படி இருக்கும் என பல விஷயங்களை இப்போது அவிழ்த்து விட்டு வருகிறார். இதனால் படத்தின் சஸ்பென்ஸ் எல்லாம் முன்கூட்டியே உடையும் அபாயம் இருக்கிறது.

Also Read : கோடு போட்டா ரோடே போடும் தளபதி.. அனிருத்தை ஆச்சரியப்பட வைத்த விஜய்

பொதுவாக லோகேஷ் ஒரு விஷயம் சொன்னால் அதில் பல சஸ்பென்ஸ்கள் மறைந்திருக்கும். அவரை நம்பி விஜய் முழு பொறுப்பையும் ஒப்படைத்து வைத்துள்ளார். கண்டிப்பாக லியோ படத்தை பற்றி நூல் இலையும் கசியாது என்ற நம்பிக்கை விஜய்க்கு இருக்கிறது.

ஆனால் வெங்கட் பிரபு மீது அந்த நம்பிக்கை இப்போது விஜய்க்கு இல்லையாம். அதேபோல் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் மற்றும் விஜய்யின் மேனேஜர் ஜெகதீஷ் போன்றவர்களும் வெங்கட் பிரபு மீது நம்பிக்கை இழந்துள்ளனர். இனியாவது சுதாகரித்துக் கொண்டு வெங்கட் பிரபு நடந்து கொள்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read : வாத்தி கம்மிங் விட அட்டகாசமாக ரெடி ஆகிய லியோ பாடல்.. விஜய், அனிருத்துடன் இணைந்த கோளாறான பிரபலம்

Trending News