புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

தளபதி 68 பட குழுவை பாடாய்ப்படுத்தும் விஜய்.. சென்னை வந்ததும் பரபரப்பான வெங்கட் பிரபு

Thalapathy 68 Movie Update: லியோ படத்தின் வெற்றிக்குப் பிறகு அடுத்து விஜய் நடிக்கும் படம் தான் தளபதி 68. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்றது. தளபதி 68 படத்தில் இடம்பெறும் முக்கிய ஆக்ஷன் காட்சிகள் தாய்லாந்தில் நடத்த திட்டமிட்டு பாங்காங் சென்றனர்.

ஆனால் அங்கு கார் சேஸிங், கார் பிளாஸ்ட் போன்றவற்றுக்கு தாய்லாந்த் அரசு அனுமதி தரவில்லை. அதனால் பட குழுவினர் அதிரடியாக தாய்லாந்தில் இருந்து சென்னை கிளம்பி வந்து விட்டனர். இருப்பினும் போனதற்கு அங்கு படத்தில் இடம்பெறும் ஒரு சிலர் ரொமான்ஸ் காட்சிகளை மட்டும் படமாக்கினர்.

இப்போதுதான் தளபதி 68 பட குழுவினர் சென்னை வந்திருக்கின்றனர். சில நாட்கள் ரெஸ்ட் எடுத்த பிறகு மறுபடியும் படப்பிடிப்பை துவங்கலாம் என திட்டமிட்டனர். ஆனால் விஜய் என்ன நினைக்கிறாரோ தெரியவில்லை, சென்னை வந்த கையோடு வெங்கட் பிரபுவுக்கு கால் செய்து ரெஸ்ட் எல்லாம் வேண்டாம். தொடர்ந்து படப்பிடிப்பை நடத்தலாம் வாங்கன்னு சொல்லிவிட்டார்.

Also Read: லோகேஷ், விஜய்யை எரிச்சல் அடைய செய்த மன்சூர் அலிகான்.. இருக்கிறதையும் இழந்த வீரபத்ரன்

செம ஃபாஸ்ட் ஆக இருக்கும் தளபதி

வேற வழி இல்லாமல் தளபதி 68 பட குழு சென்னையில் ஷூட்டிங்கை துவங்கி விட்டனர். அதன் தொடர்ச்சியாக அடுத்த கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து நடத்தப் போகின்றனர். தற்போது விஜய் ஃபேமிலி உடன் இல்லாமல் இருப்பதால் வீட்டில இருக்கவே பிடிக்கவில்லையாம்.

அதனால் தான் லியோ படம் முடிந்த கையோடு தளபதி 68 படத்தில் இணைந்தார். இப்போது இந்த படத்தை சீக்கிரமே முடித்துவிட்டு அடுத்த படத்தில் கமிட் ஆகி சம்பளத்தையும் வாங்கிவிடலாம், அப்போதுதான் எலக்சனுக்கு கைக்குளிர செலவு செய்ய முடியும் என்பதுதான் தளபதியின் பிளான்.

Also Read: போற போக்கில் கொளுத்தி போட்ட அண்ணாச்சி.. விஜய்யையும், ரஜினியையும் வச்சி செஞ்ச லெஜெண்ட்

Trending News