திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பிரம்மாண்ட பட்ஜெட்டில் விஜய்யை உருமாற்றும் வெங்கட் பிரபு. டைட்டிலுடன் வெளிவரும் பர்ஸ்ட் லுக் எப்ப தெரியுமா?

Thalapathy 68 First look: லியோவின் வெற்றிக்குப் பின் விஜய், வெங்கட் பிரபு கூட்டணியில் இணைந்துள்ள படம் தளபதி 68. லியோவின் வசூலை முறியடிக்கும் பொருட்டு தளபதி 68 ரெடியாகி வருகிறது. ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் யுவன் சங்கர் ராஜா இசையில் பிரம்மாண்டமான பொருட் செலவில் ரசிகர்களை குஷிபடுத்த வருகிறார் வெங்கட் பிரபு.

எப்போதும் போல “வெங்கட் பிரபு புதிர்” என்று டேக் லைன் வைத்து ரசிகர்களின் ஹைப்பை அதிகமாக்கியுள்ளார். இதனால் இது ஒரு சயின்ஸ்பிக்ஷன் படமாகவோ அல்லது டைம் டிராவல் படமாகவோ இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

வெங்கட் பிரபு என்றாலே ஒரு கல்யாண கூட்டமே படத்தில் இருக்கும். விஜய் உடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், மோகன், யோகி பாபு, கணேஷ், அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ் என பல நட்சத்திர பட்டாளங்கள் கலக்க உள்ளன.

Also read: 2023-இல் இன்ஸ்டாவில் அதிக ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் 6 ஹீரோக்கள்.. விஜய்யை பின்னுக்கு தள்ளிய ஹீரோ

புத்தாண்டிற்கு ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக முந்தைய நாளான Dec 31 மாலை 6 மணிக்கு தளபதி 68 படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்றும், புத்தாண்டு அன்று டைட்டிலுடன் செகண்ட் லுக் வெளியிடப்படும் என்று பட குழுவினர் தெரிவித்துள்ளனர்.   டீன் ஏஜ் தோற்றத்தில் தளபதியை காண அவரது ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

கோமாளியில் ஜெயம் ரவி சிறு வயது பள்ளி மாணவனாக தோன்றிய ஆச்சரியப்படுத்தினார். அதேபோல் இப்படத்தில் தளபதி 68 காக விஜய் இரண்டு வேடங்களில் தோன்ற உள்ளார். மேலும் இப்படத்தில் வரும் சில காட்சிகளுக்காக டீன் ஏஜ் பையனாக உருமாறப் போகிறார். இதற்காகவே ஆறு கோடிக்கு மேல் செலவழித்து உள்ளார்களாம் பட குழுவினர்.

தளபதி 68 படத்திற்கு தலைப்பு “புதிர்” எனவும் லியோ போல் ஆங்கில தலைப்பாக “பாஸ்” இருக்கலாம் எனவும் வதந்திகள் பரவிய நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி இது இரண்டும் இல்லை என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மங்காத்தா போன்று தளபதிக்காக  மாஸான டைட்டிலை  தெறிக்க விடுவார் வெங்கட் பிரபு என எதிர்பார்க்கலாம்.

Also read: தளபதியை குஷி படுத்த 5 ஹீரோயின்களை களம் இறக்கும் வெங்கட் பிரபு.. மார்க்கெட் குறையாத லைலா

Trending News