புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தளபதி 68 ஹீரோயினை லாக் செய்த வெங்கட் பிரபு.. ஜோதிகாவை தாண்டி இளம் ஹீரோயினுக்கு அடித்த அதிர்ஷ்டம்

Thalapathy 68 Heroine: தளபதி விஜய் ரசிகர்கள் எந்த அளவுக்கு லியோ படத்தின் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்களோ, அதே அளவுக்கு தளபதி 68 படத்தின் அப்டேட்டுக்காகவும் தவமாய் தவம் இருக்கிறார்கள். லியோ படத்தின் எதிர்பார்ப்பை தளபதி 68 எந்த விதத்திலும் குறைத்து விடக்கூடாது என்பதால் தான் இந்த பட குழு ரொம்பவே அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறது.

இருந்தாலும் அவ்வப்போது இந்த படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற தகவல் கசிந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ஜெய், பிரபுதேவா, பிரசாந்த், என சில நடிகர்களின் பெயர்கள் தளபதி 68 லிஸ்ட்டில் சேர்ந்து இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார்கள் என்பது மட்டும் கிணற்றில் போட்ட கல்லாகவே இத்தனை நாள் இருந்தது.

Also Read:தலையில் மிளகாய் அரைக்க பார்த்த லியோ டீம்.. ரிவிட் அடித்த லலித், உறைந்து போய் நிற்கும் விஜய்

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரிட் ஜோடியான விஜய் மற்றும் ஜோதிகாவை இந்த படத்தில் இணைத்து விட வேண்டுமென வெங்கட் பிரபு பல முயற்சிகள் செய்தார். ஆனால் ஒரு சில டிமான்டுகளால் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. 2கே கிட்ஸ் களின் ஃபேவரிட் ஹீரோயினான பிரியங்கா மோகன் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியானது.

கடைசியில் விஜய்க்கு ஜோடி ஜோதிகாவும் இல்லை, பிரியங்காவும் இல்லை என தெரிய வந்திருக்கிறது. இந்த வாய்ப்பை பிரபல இளம் நடிகை ஒருவர் தட்டி பறித்து இருக்கிறார். தெலுங்கு சினிமாவில் தன் தாராள கவர்ச்சியின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருக்கும் மீனாட்சி சவுத்ரி தான் அந்த அதிர்ஷ்டமான நடிகை.

                                                                       நடிகை மீனாட்சி சவுத்ரி

Actress Meenakshi Choudhry
Actress Meenakshi Choudhry

மீனாட்சி சவுத்ரி மாடலிங் துறையை சேர்ந்தவர். பல அழகி போட்டிகளில் கலந்து கொண்டு பட்டம் பெற்ற இவர் பின்னர் சினிமா துறையை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியான கொலை படத்தில் இவர் ஹீரோயின் ஆக நடித்திருந்தார். இவருக்கு தளபதி 68 தமிழில் இரண்டாவது படம் ஆகும்.

இவர்தான் விஜய்க்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தளபதி 68 படத்தின் பட பூஜை நாளை சென்னையில் நடைபெற இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்த படத்திற்கு அவருடைய ரசிகர்களிடமிருந்து மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பி இருக்கிறது.

Also Read:லியோவுக்கு மட்டும் தான் பிரச்சனைக்கு மேல பிரச்சனை.. அடுத்தடுத்து நேரு ஸ்டேடியத்தை ஆக்கிரமிக்கும் 4 படங்கள்

Trending News