திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அந்தக் கொடுமையை ஒருவாட்டி பாத்துட்டோம்.. தளபதி 68 அரசியல் சம்பந்தப்பட்ட கதை இல்லையாம்

வாரிசு படத்திற்குப் பிறகு விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் முக்கால்வாசி ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இன்னும் ஒரு சில மாதத்தில் விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் இணைகிறார்.

இந்த படத்தின் கதை ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என சொன்னபோது அதற்கு தகுந்தாற்போல் அரசியல் சம்பந்தப்பட்ட கதையாகவே பிரத்தியேகமாக உருவாக்கினார் வெங்கட் பிரபு. கடைசியில் ரஜினி அரசியலுக்கு வரமாட்டேன் என ஜகா வாங்கிய பிறகு, இப்போது விஜய் தான் அரசியலில் இறங்க அத்தனை ஏற்பாடுகளையும் ஸ்கெட்ச் போட்டு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்.

Also Read: 40 வருடமாகியும் வித்தியாவை மறக்காத தளபதி விஜய் .. பாசத்தால் நெகிழ வைத்த சம்பவம்

ஆகையால் இந்த கதை விஜய்க்கு பொருந்தும் என அவரிடம் சொல்லிய வெங்கட் பிரபு, உடனே பண்ணி விடலாம் என்று விஜய் சொன்னதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் இப்போது தளபதி 68 படம் அரசியல் சம்பந்தப்பட்டது இல்லை என்றும் அது விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான வாரிசு படத்தை போன்ற குடும்ப செண்டிமெண்ட் கதை என்பது தெரிய வந்ததால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்து இருக்கின்றனர்.

விஜய் 68 படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார் என்று சொன்னதுமே இந்த படத்தை பற்றி மட்டுமே ரசிகர்கள் பேசி வருகிறார்கள். படத்தில் யார் யாரெல்லாம் நடிக்கப் போகிறார்கள் என ரசிகர்களே யூகித்து சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எதிர்பார்ப்புக்குள்ளான படமாக மாறிவிட்டது. அதேபோல் இந்த படத்தின் கதை அரசியல் கதை என பலரும் கூறி வந்தனர்.

Also Read: நடிப்பை தாண்டி ஷாப்பிங் மாலில் அதிகம் முதலீடு செய்யும் விஜய்.. மூக்கு மேல விரல் வச்சு பார்க்கும் திரையுலகம்

ஆனால் இந்த கதை வேறு கதை என தற்போது புது புரளி ஒன்று வந்துள்ளது. தந்தைக்கும் மகனுக்கும் ஒரு பிரச்சனை, ஈகோ போன்றவை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளதாம். அப்படி என்றால் வாரிசு படத்தின் அதே கதை தான் இந்த படத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது. ஒரே கதையாக இருந்தாலும் வெங்கட் பிரபு அவரது ஸ்டைலில் எப்படி கொடுக்க போகிறார் என்று எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

ஆனால் மீண்டும் விஜய் இதே மாதிரி கதையில் நடிப்பதால் ரசிகர்களுக்கு எப்படி இருக்கும். விஜய்யின் படம் பிளாப் ஆகி விடக்கூடாது என்பதற்காகத்தான் பல்லைக் கடித்துக் கொண்டு ஒரு முறை வாரிசு படத்தை பார்த்து விட்டோம். எப்போதுமே தளபதியை மாஸாகவே பார்க்க விரும்புகிறோம், அவருக்கு குடும்ப செண்டிமெண்ட் செட் ஆகாது அந்த கொடுமையை ஏற்கனவே ஒரு தடவை பார்த்து விட்டோம். மறுபடியும் வேண்டவே வேண்டாம் என்று தளபதி ரசிகர்கள் பதறுகின்றனர்.

Also Read: விஜய்க்கு ஓகே சொன்ன கதையில ஹிட் கொடுத்த லியோ பட வில்லன்.. மொத்தத்தையும் போட்டுடைத்த இயக்குனர்

Trending News