வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஒரு வருஷம் சம்பவம் செய்யப் போகும் விஜய்.. லியோவை மிஞ்சிய தளபதி 68 ரிலீஸ் அப்டேட்

Thalapathy 68 Release Update: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக்கிக் கொண்டிருக்கும் லியோ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் விஜய்யின் அரசியல் வருகை, தளபதி 68 படத்தின் அப்டேட் போன்றவை லியோ படத்தின் எதிர்பார்ப்பை குறைத்துவிட்டது.

இதனால் லியோ ரிலீசுக்கு பின்பு தான் வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தின் அப்டேட்டை கொடுக்க வேண்டும் என அவருக்கு வாய் பூட்டு போட்டிருக்கிறார். அப்படியும் விஜய் பேச்சை மீறி, அந்தப் படத்தின் ரிலீஸ் அப்டேட் தற்போது வெளியாகி லியோவை மிஞ்சிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது.

Also Read: பின்னணி பாடகர்களை மிஞ்சிய விஜய்.. தயாரிப்பாளர்களுக்கு செலவில்லாமல் பாடும் 6 நடிகர்கள்

வரும் ஆயுத பூஜைக்கு லியோ படம் ரிலீஸ் ஆகிறது. அந்த படத்திற்கு பிறகு ஒரு சில மாதங்களில் ஜாலியாகவும் கலாட்டாவாகவும் இருக்கக்கூடிய வெங்கட் பிரபுவின் தளபதி 68 படத்தில் விஜய் நடித்து முடித்து விடுவார். அதன் பிறகு அவர் முழுக்க முழுக்க இரண்டு வருடத்திற்கு அரசியலில் இறங்கப் போகிறார் என்ற செய்தியும் வெளியானது.

ஆனால் அதற்கெல்லாம் மாறாக இப்போது லியோ படத்தை விட தளபதி 68 படத்தில் ஒரு வருட படப்பிடிப்பில்
இணைந்து தரமான சம்பவம் செய்யப் போகிறார். இதன் படப்பிடிப்பு ஒரு சில மாதத்தில் நிறைவடையும் என்பதெல்லாம் கட்டுக்கதை. ஒரு வருடம் முழுவதுமாக தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு நடைபெறப் போகிறது.

Also Read: பிளாப் படங்களை கம்மியா கொடுத்த 2 ஹீரோக்கள்.. விஜய், அஜித் எல்லாம் இந்த லிஸ்ட்ல இல்ல

அதற்காக இந்த வருட அக்டோபர் மாதத்தில் படப்பிடிப்பு துவங்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தீபாவளியை முன்னிட்டு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருக்கிறது. எனவே இந்த வருட அக்டோபரில் தளபதி ரசிகர்களுக்கு லியோ ரிலீஸ் ஆகி ட்ரீட் கொடுக்கப் போகிறது.

அதேபோல அடுத்த வருடம் தளபதி 68 படம் பெரிய சம்பவத்தை செய்ய காத்திருக்கிறது. இந்த முறை விஜய் வித்தியாசமாக யோசித்து வெங்கட் பிரபுவுடன் இணைந்ததால், அஜித்தின் மங்காத்தா மற்றும் சிம்புவின் மாநாடு படத்தை போலவே தளபதிக்கு இந்த படம் முக்கிய திருப்பு முனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வருடம் மட்டுமல்ல அடுத்த வருட தீபாவளியும் சரவெடியாகத்தான் இருக்கப்போகிறது.

Also Read: மதத்தால் சர்ச்சைக்குள்ளான சண்டைக்கோழி நடிகை.. ஓவர் நைட்டில் காணாமல் போன விஜய் பட ஹீரோயின்

Trending News