செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

பட்ட அவமானங்களை படமாக்கும் தளபதி 68.. எல்லாத்தையும் ஒரு கை பார்த்திடலாம் துணிந்து நிற்கும் விஜய்

Vijay 68 Movie: விஜய், லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தை நடித்து முடித்து இருக்கிறார். இப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. அத்துடன் இப்படம் அனைத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் வகையில் இருக்கப் போகிறது. இதனைத் தொடர்ந்து இவருடைய அடுத்த படமான 68வது படத்தை வெங்கட் பிரபுவுடன் கமிட் ஆகிவிட்டார்.

இதற்கான ஒவ்வொரு வேலைகளும் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. அத்துடன் வெங்கட் பிரபு, படம் என்று சொன்னதும் கண்டிப்பாக காமெடிக்கு பஞ்சமே இருக்காத அளவிற்கு ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று பல பேச்சுக்கள் அடிபட்டு வந்தது. இந்நிலையில் இதற்கு எதிர்மறாக இப்படம் முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தமான படமாக இருக்கப் போகிறது.

Also read: வித்தியாசமாய் நடிக்க வரும்னு விஜய் மொக்கை வாங்கிய 5 படங்கள்.. இளைய தளபதியை வச்சு செய்த இயக்குனர்ஸ்

அதாவது இப்படத்தில் விஜய், அமலாக்கத்துறை அதிகாரியாக நடிக்க இருக்கிறார். இதன் மூலம் மத்திய அரசுக்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக பல காட்சிகள் வடிவமைக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் விஜய், மத்திய அரசின் ரைடு மூலம் அதிக அளவில் அசிங்கப்பட்டு அவமானங்களை சந்தித்திருக்கிறார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மனதில் வைத்திருக்கும் பாரங்களை இறக்கி இந்த படத்தை அரசியல் சார்ந்த படமாக எடுக்க கண்டிஷன் போட்டிருக்கிறார். அதற்கேற்ற மாதிரி வெங்கட் பிரபு, விஜய்யிடம் அமலாக்கதுறையின் அதிகாரிகளால் ஏற்பட்ட கஷ்டங்கள் அனைத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக படம் இருக்கும் என்று கூறி இருக்கிறார்.

Also read: வளரும் போதே ஆர்வக்கோளாறில் விஜய் நடித்த படம்.. அப்பாவை மதிக்காமல் கையில் எடுத்த ஆயுதம்

அதனால் விஜய் தன் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் படமாக்கி மத்திய அரசின் பிரபலங்களை பழிவாங்குவதற்காக, இப்படத்தை பயன்படுத்தி நடிக்க போகிறார். மேலும் என்ன நடந்தாலும் பரவாயில்லை என்று எல்லாத்துக்கும் துணிந்து ஒரு கை பார்த்திடலாம் என்று இறங்குகிறார்.

அதற்கு ஏற்ற மாதிரி வெங்கட் பிரபு, விஜய் என்னெல்லாம் சொல்கிறாரோ அதை எல்லாம் படமாக்கி அவருக்கும், அவருடைய அரசியலுக்கும் சம்பந்தமான படமாக எடுக்கப் போகிறார். பொதுவாக சொல்வார்களே அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா, அதை போல் விஜய் அரசியலில் இறங்க போவதால் எல்லாத்தையும் துணிந்து செய்ய இருக்கிறார்.

Also read: என்னோட ரசிகன் இதை ஏத்துக்க மாட்டான்.. விஜய் மாதிரி எல்லாம் என்னால நடிக்க முடியாது எனக் கூறிய நாகார்ஜுனா

Trending News