Vijay: தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் இன்று வெளியாகி இருக்கிறது. இதை விஜய் ரசிகர்கள் ஆனந்த கண்ணீருடன் கொண்டாடி வருகிறார்கள்.
காரணம் இது விஜயின் கடைசி படம். கிட்டத்தட்ட கடந்த இரண்டு தலைமுறை ரசிகர்களை தன்னுடைய ஸ்டைலிஷ் ஆன நடிப்பின் மூலம் கட்டிப்போட்டு வைத்திருக்கிறார் விஜய்.
விஜய் படம் ஷூட்டிங், விஜய் படம் ஆடியோ வெளியீட்டு விழா, விஜய் படம் ரிலீஸ் என்ற கொண்டாட்டத்தை பார்த்து வளர்ந்தவர்கள் நாம்.
தளபதி 69 படத்தின் பர்ஸ்ட் லுக், டைட்டிலுடன்
ஆனால் அவர் சினிமாவை விட்டு விலக இருக்கிறார். இது தமிழ் சினிமாவிற்கு ஒரு மிகப்பெரிய வெற்றிடம் என்றுதான் சொல்ல வேண்டும்.
தன்னுடைய கடைசி படத்தை இயக்கும் வாய்ப்பை அஜித்குமாரின் ஆஸ்தான இயக்குனர் எச் வினோத்துக்கு கொடுத்திருக்கிறார்.
இது ஒரு தரமான அரசியல் படம் என ஏற்கனவே செய்திகள் வெளியானது. மேலும் இந்த படத்திற்கு நாளைய தீர்ப்பு என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில் தான் படத்தின் தலைப்பு ஜனநாயகன் என அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கிறது.
முழுக்க வெள்ளை ஆடை அணிந்திருக்கும் மக்கள் கூட்டத்தின் நடுவே விஜய் செல்பி எடுப்பது போல் பஸ்ட் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.
போஸ்டர் மற்றும் தலைப்பை பார்க்கும் போது பக்காவான அரசியல் படம் உருவாகிக் கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
ஒன் லாஸ்ட் டைம் என்பதை தாண்டி, தலைவா ஒன் மோர் டைம் என ரசிகர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.