வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

காந்தாரா 2-வால் தள்ளிப்போகிறதா தளபதி 69.? விஜய்யின் கடைசி பட ரிலீஸ் எப்போது.?

Vijay-Thalapathy 69: பிரபல கன்னட நடிகர் ரிஷப் செட்டி இயக்கி நடித்திருந்த காந்தாரா கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்தது. வெறும் 16 கோடியில் எடுக்கப்பட்ட அப்படம் கிட்டத்தட்ட 300 கோடியை தாண்டி வசூலித்து அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.

kantara
kantara

அதைத்தொடர்ந்து அடுத்த பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதன் பலனாக தற்போது போஸ்டர் உடன் ரிலீஸ் தேதியை பட குழு வெளியிட்டு இருக்கிறது. ஆனால் படத்தை பார்க்க இன்னும் அவர்கள் ஓராண்டு காலம் காத்திருக்க தான் வேண்டும்.

ஏனென்றால் காந்தாரா 2 அடுத்த வருடம் அதாவது 2025 அக்டோபர் 2ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ஆனால் இந்த அறிவிப்பால் தளபதி 69 படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஒரு தகவலும் சத்தம் இல்லாமல் கசிந்து உள்ளது.

தளபதி 69 படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிறதா.?

விஜய் நடிக்கும் கடைசி படம் என்பதால் இதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதுவும் வினோத் இயக்குனர் என்பது கூடுதல் சிறப்பாக இருக்கிறது. மேலும் படத்தின் தியேட்டர் உரிமையை பல கோடி கொடுத்து வாங்குவதற்கும் போட்டா போட்டி நடக்கிறது.

தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் படத்தை அடுத்த வருடம் அக்டோபர் மாதம் வெளியிடுவதற்கு தான் பட குழு திட்டமிட்டு இருக்கின்றனர். ஆனால் இப்போது இரண்டாம் தேதி காந்தாரா டீம் கைவசப்படுத்திய நிலையில் தீபாவளிக்கு தளபதி 69 வெளியாகும் என கூறப்படுகிறது.

இதனால் காந்தாரா 2 படத்தால் விஜய் பின்வாங்கி விட்டாரா என்றும் ஒரு கேள்வி இருக்கிறது. ஆனால் படக்குழுவினர் திட்டமிட்டது தீபாவளி ரிலீஸ் தான் என ஒரு தரப்பு கூறுகின்றனர். ஆக மொத்தம் அடுத்த அக்டோபர் மாதம் 2 மெகா ட்ரீட் ரசிகர்களுக்கு காத்திருக்கிறது.

Trending News