திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பயங்கர திட்டத்தோடு உருவாகும் தளபதி 69.. பல மடங்கு லாபத்திற்காக பிளான் போடும் விஜய்

விஜய் இப்போது அடுத்தடுத்த திரைப்படங்களில் பிசியாக ஆரம்பித்துவிட்டார். முன்பெல்லாம் ஒரு திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டு தான் அடுத்த பட அறிவிப்பையே அவர் வெளியிடுவார். ஆனால் இப்போது அப்படி கிடையாது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்தடுத்த படங்களில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

அந்த வகையில் தற்போது அவர் நடித்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதை அடுத்து அவர் தளபதி 68 திரைப்படத்திற்காக அட்லீயை டார்கெட் செய்துள்ளார். ஏற்கனவே இவர்களின் கூட்டணி பல வெற்றி திரைப்படங்களை கொடுத்திருக்கிறது. அதனாலேயே இப்போது இவர்கள் மீண்டும் இணைந்து இருக்கின்றனர்.

Also read: விஜய்க்கு ஒரு நியாயம், அஜித்துக்கு ஒரு நியாயமா?. ஏகே 62 படத்திற்கு மீண்டும் உருவாகும் பிரச்சனை

மேலும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறது. கடைசியாக விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை தயாரித்திருந்த இந்த நிறுவனம் இப்போது சூப்பர் ஸ்டாரின் ஜெயிலர் திரைப்படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை அடுத்து விஜய் தளபதி 69 படத்திற்கான வேலைகளிலும் மும்முரமாகியுள்ளார்.

இந்தப் படத்தை விஜய்க்கு தற்போது எல்லாமுமாக இருக்கும் ஒருவர்தான் தயாரிக்க இருக்கிறாராம். அவர்தான் இப்போது விஜய்க்கு ஆதரவாகவும், நம்பிக்கையானவராகவும் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் விஜய்யின் கடந்த சில திரைப்படங்களில் இணை தயாரிப்பாளராக இருக்கும் அவருடைய மேனேஜர் ஜெகதீஷ் தான் தளபதி 69 திரைப்படத்தை தயாரிக்க இருக்கிறார்.

Also read: லியோவை ஓவர் டேக் செய்ய வரும் தளபதி 69.. 900 கோடி பட்ஜெட்டுடன் களமிறங்கும் டீம்

தற்போது லியோ திரைப்படத்திலும் இவர் இணை தயாரிப்பாளராக இருக்கிறார். உண்மையில் இவரை பினாமியாக வைத்து தான் விஜய் தன் படங்களில் சொந்த காசை முதலீடு செய்து வருகிறார். இதன் மூலம் அவருக்கு சம்பளத்துடன் சேர்த்து பல மடங்கு லாபமும் கிடைத்து வருகிறது. அதனாலேயே விஜய் மறைமுக தயாரிப்பாளராக இயங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் தளபதி 69 திரைப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்க இருக்கிறார். இதற்காக 900 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட இருக்கிறது. மேலும் இப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாக இருக்கிறதாம். அதனாலேயே விஜய் இந்த படத்தின் மூலம் பல மடங்கு லாபத்தை தட்டி தூக்க பிளான் போட்டு இருக்கிறார். அதற்கு முதுகெலும்பாக ஜெகதீஷ் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: 30 நாளை கடந்து வாரிசு படத்தின் வசூல் ரிப்போர்ட்.. தில்ராஜுக்கு விழுந்த அடி

Trending News