திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

ஒரே வருடத்தில் 18 படத்தில் தளபதி தினேஷ்.. நான் சினிமாவில் சாதித்ததற்கு இவங்க தான் காரணம்

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல சண்டை நடிகர்கள் காமெடியாக நடித்து ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றனர். அந்த வரிசையில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளார் தளபதி தினேஷ்.

இவர் சினிமாவின் ஆரம்ப காலத்தில் பல படங்களில் சண்டை நடிகராக ரசிகர்களிடம் அறிமுகமானார். அதுவே காலப்போக்கில் இவர் பல படங்களில் வில்லத்தனமாக நடிக்க இவரை வில்லனாகவே பல ரசிகர்களும் ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் தளபதி தினேஷுக்கு இரண்டு கால்களிலும் மூட்டு தேய்மானம் ஆகியும் மனம் தளராமல் பல படங்களிலும் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் சிரிக்க வைக்கக்கூடிய ஒரே ஒரு சண்டை இயக்குனர் தளபதி தினேஷ்.

thalapathy dhinesh
thalapathy dhinesh

காமெடி கலந்த கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்து இருப்பார். இவர் ஒரு முரட்டுத்தனமான தினேஷ் என்று கூட கூறலாம். அதாவது பாட்ஷா படத்தில் அடியாளாக நடித்திருப்பார்.

சந்தானம் கலாய்க்கும் திமிங்கலம் கதாபாத்திரம் தளபதி தினேஷ் ரொம்ப பிடித்ததாம். தளபதி படத்தில் ரஜினியுடன் ஒரு பயங்கரமான சண்டை பண்ணியிருப்பார். அப்போதிலிருந்து இவருக்கு தளபதி தினேஷ் என பெயர் கிடைத்துள்ளது.

ரஜினிகாந்த் மற்றும் சுந்தர் சியின் படங்களில் அதிகம் நடித்துள்ளார். அதனால் சினிமாவில் எனக்கு சுந்தர் சி தான் குரு எனவும் கூறியுள்ளார். ஒரு வருடத்திற்கு 18 படங்கள் சண்டை இயக்குனராக பணியாற்றியுள்ளார். சண்டை இயக்குனராக பணியாற்றி தற்போது காமெடியில் கலக்கி வருகிறார் தளபதி தினேஷ். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஒரு சில படங்கள் வெற்றி அடைந்து வருகின்றன.

Trending News