தவெக கட்சியைத் தொடங்கிய விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடவுள்ளார். அதனால், விஜய்69 இவரது கடைசிப் படமாகும். ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் விஜய்69 படத்தில் விஜய் நடித்து வருகிறார். கேவிஎன் புரடக்சன்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.
இப்படம் அரசியல், சமூக அக்கறை கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் கதையும், தெலுங்கு ஹீரோ பாலகிருஷ்ணனின் பகவந்த் கேசரி படத்தின் கதையும் ஒன்றாக இருப்பதாக கூறப்பட்டது.
உடனே கேவிஎன் புரடக்சன்ஸ் இப்படத்தின் உரிமையை கைப்பற்றியது. இந்த நிலையில் விஜய் 69 படத்தில் தன் மகன் இயக்கத்தில் விஜய் நடித்திருந்தால், அவர் புதிய சாதனை படைத்திருப்பார்.
தன் முதல் படமான நாளைய தீர்ப்பில், தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரால் அறிமுகமானார் விஜய். அதன்பின் பல படங்கள் மூலம் தன் திறமையை நிரூபித்தார். தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக விஜய் வலம் வருகிறார்.
எஸ்.ஏ.சி இயக்கத்தில் அறிமுகமாகி, மகன் இயக்கத்தில் கேரியரை முடித்திருந்தால்?
விஜய், சினிமாவை விட்டு வெளியேறும் போது, அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக நுழைகிறார். ஒருவேளை விஜய்யின் கடைசிப் படத்தை ஜேசன் இயக்கும் பட்சத்தில் புதிய சாதனை நிழ்ந்திருக்கும்.
அதாவது, விஜய் தன் தந்தையின் இயக்கத்தின் முலம் அறிமுகமாகி, தன் மகனின் படம் மூலம் சினிமா கேரியரை நிறைவு செய்தார். இப்படி செய்த ஒரே நடிகர் என்ற சாதனையை படைத்திருப்பார்.
அதைவிட்டு விட்டாரே என ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர். ஆனால் வேறு புதிய சாதனையை விஜய் படைப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.