தமிழ் சினிமாவைப் பொருத்தவரை முன்னணி நடிகர்களாக புகழின் உச்சத்தில் இருக்கும் ரஜினி, கமல், விஜய், சூர்யா என பல நடிகர்கள் அவர்களது படங்களில் பெண் வேடமிட்டு நடித்துள்ளார்கள். இவர்களைத் தவிர பல காமெடி நடிகர்களும் பெண் வேடமிட்டு நடித்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள நடிகர் கார்த்தி வரலாற்றில் இடம்பிடித்த வீர மங்கைகளின் பெருமையை எடுத்துக் காட்டும் வகையில் பெண் வேடமிட்டு போட்டோ ஷூட் நடத்தி உள்ளார்.
கார்த்தி என்றதும் நம்மில் பலருக்கும் நினைவுக்கு வருவது நவரச நாயகன் கார்த்திக் மற்றும் நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி தான். ஆனால் இவர்களை தாண்டி கார்த்தி என்ற குணச்சித்திர நடிகர் உள்ளார். அட, அதாங்க இன்று நேற்று நாளை படத்தில் சைன்டிஸ்ட்டா வருவாரே அவரே தான். இவர் பல வருடங்களாக சினிமா துறையில் இருந்து வருகிறார்.
கார்த்தி தமிழில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான சர்வம் படம் மூலமே அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல்வேறு படங்களில் காமெடியனாக நடித்து உள்ளார். இவர் நடித்த படங்களில் எல்லாம் இவரது நடிப்பு நிச்சயம் பாராட்டை பெற்று விடும்.
அந்த வகையில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். நடிகை இலியானாவை திருமணம் செய்துகொள்ளும் மாப்பிள்ளையாக கார்த்தி நடித்து இருப்பார். அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு நிலையில் இவர் வரலாற்று வீர மங்கைகளான ஜான்சி ராணி, வேலு நாச்சியார், ராணி சென்னம்மா போன்றவர்களை போலவே வேடமிட்டு போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். பார்ப்பதற்கு அச்சு அசல் பெண் போலவே இருக்கும் இவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. மேலும் பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.