வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வாய்ப்பு மட்டும் தாங்க என்ன வேணாலும் செய்கிறேன்.. பார்ட்டி பார்ட்டியாக செல்லும் தளபதி பட நடிகை

Tamil Actress: தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்துக் கொண்டிருந்த டாப் நடிகை ஒருவர் திடீரென்று நீண்ட நாள் காதலனை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானார். அதன் பின் அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இப்போது மறுபடியும் சினிமாவில் நடிக்க வேண்டும் என தன்னுடைய உடல் எடையை ஸ்லிம்மாக குறைத்து, கவர்ச்சி தூக்கலான போட்டோ ஷூட்களை நடத்தி வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார்.

தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ என்ற படத்தில் துணை நடிகையாக நடித்ததன் மூலம் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த ஸ்ரேயா அதன் பிறகு தனுஷ், விக்ரம், விஜய், ரஜினி என டாப் நடிகர்களுடன் வெகு சீக்கிரமே ஜோடி சேர்ந்தார். நடிகை ஸ்ரேயா தமிழில் முன்னணி நடிகையாக இருந்து திடீரென திருமணம் செய்து கொண்டு காணாமல் போனார். அதன் பிறகு மீண்டும் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த ஸ்ரேயா, சமீப காலமாக நடிக்கும் எந்த படங்களும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை.

Also Read: விஜய்யை ஆட்டி படைக்கும் அந்த பெரும்புள்ளி.. தலையாட்டி பொம்மை போல் சொன்னதைச் செய்யும் தளபதி

குறிப்பாக இவருடைய நடிப்பில் கன்னடத்தில் வெளியான ‘கப்சா’ மற்றும் ஹிந்தி, தெலுங்கில் ரிலீஸ் ஆன ‘மியூசிக் ஸ்கூல்’ போன்ற படங்கள் படு தோல்வியை சந்தித்தது. இப்படி எல்லா மொழிகளிலும் மொக்க பட வாய்ப்பு மட்டுமே கிடைத்துக் கொண்டிருக்கிறது. அதிலும் தமிழில் சுத்தமாகவே வாய்ப்பு வருவதில்லை.

மேலும் சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த ஸ்ரேயா மீண்டும் ஒருமுறை ரஜினிக்கு கதாநாயகியாக நடிப்பது தான் தன்னுடைய மிகப்பெரிய ஆசை என்றும் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியின் மேடையில் பகிரங்கமாக தன்னுடைய ஆசையை வெளிப்படுத்தி வாய்ப்பு கேட்டார்.

Also Read: லோகேஷ் இடம் இந்த ஸ்டைல் வியப்பா இருந்துச்சு.. விஜய்யின் அப்பா கூறிய சீக்ரெட்

இப்போது ஒரு படி மேலே சென்று பார்ட்டிகளில் வாய்ப்பு கேட்கும் பரிதாப நிலைக்கு ஸ்ரேயா தள்ளப்பட்டிருக்கிறார் அதாவது தமிழ் நடிகர்கள் தனுஷ், சிம்பு , அனிருத் ஆகியோர் அதிகமாக இரவு நேரங்களில் பார்ட்டியில் கலந்து கொள்வார்கள். இவர்கள் கலந்து கொள்ளும் பார்ட்டியில் இப்போது நடிகை ஸ்ரேயா வலுக்கட்டாயமாக கலந்து கொள்கிறார்.

அவர்களை எதார்த்தமாக சந்திப்பது போல் பார்ட்டியில் சந்தித்து படங்களில் வாய்ப்பு தேடிக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல சினிமா வாய்ப்புக்காக என்ன வேணாலும் செய்கிறேன். எனக்கு வாய்ப்பு கொடுங்கள் என நேரடியாக கேட்டு வருகிறார். அப்படி இருந்தும் வாய்ப்புகள் யாரும் கொடுக்கவில்லை.

Also Read: 308 பெண்களை டேட்டிங் செய்த லியோ பட நடிகர்.. அந்தரங்க விஷயத்தில் செய்த தில்லுமுல்லு

Trending News