தளபதி விஜய்யின் பீஸ்ட் எப்போது வெளிவரும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் அடுத்தடுத்த படங்களின் அப்டேட் வெளிவந்து ரசிகர்களை குஷிப்படுத்துகிறது. தளபதி 67 படத்தின் இயக்குனர் யார் என்ற தகவல் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவியாளராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் அட்லி. இப்படத்தை தொடர்ந்து தொடர்ந்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களில் தளபதி விஜயுடன் இணைந்து அட்லி பணியாற்றியுள்ளார்.
தமிழ் படத்தில் கிடைத்த வெற்றியை தொடர்ந்து அட்லி பாலிவுட்டிலும் ஷாருக்கானை கதாநாயகனாக வைத்து படம் இயக்கி வருகிறார். இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புனேவில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் விஜய்யின் 67 வது படத்தை அட்லி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக ஜேம்ஸ்பாண்ட் படத்தைப் போல் கதை இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டுள்ளார் தளபதி. விஜய் தற்போது நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தளபதியின் 66 வது படத்தை வம்சி பைடிபல்லி இயக்கவுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாக உள்ளது.
இதைதொடர்ந்து விஜய்யின் 67வது படத்தை யார் இயக்குவது என பல கேள்விகள் எழுந்தது. பல முன்னணி இயக்குனர்களின் பெயர்கள் அடிபட்ட நிலையில் விஜயுடன், அட்லீ மற்றும் ஏஜிஎஸ் நிறுவனமும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல் கசிந்துள்ளது. முதல்கட்ட பேச்சுவார்த்தை மட்டுமே நடந்துள்ள நிலையில் இதற்கான அடுத்தகட்ட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
இப்படத்தில் விஜய், அட்லி இணைந்தால் நான்காவது முறையாக இணையும் இந்த கூட்டணி தெறி, மெர்சல், பிகில் போல ஒரு மாஸான படமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இப்படம் உறுதியானால் அடுத்த ஆண்டு 2023 படப்பிடிப்பு தொடங்கும். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.