தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிருத் ரவிச்சந்திரன் பீஸ்ட் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து விஜயின் 66வது படமா படத்தை தில் ராஜ் தயாரிப்பில் வம்சி பைடிபல்லி இயக்கவுள்ளார். இப்படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இயக்குனர் வெற்றிமாறன் தற்போது விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி, கௌதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.
இப்படத்தில் விஜய் சேதுபதி வாத்தியார் ஆகவும், சூரி மற்றும் வாசுதேவ் மேனன் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார்கள். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். வெற்றிமாறன் மற்றும் இளையராஜா இருவரும் முதல் முறையாக இப்படத்தில் இணைந்துள்ளார்கள்.
இப்படத்தை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தையும், ராகவா லாரன்ஸ் நடிப்பில் அதிகாரம் படத்தையும் இயக்க உள்ளார் வெற்றிமாறன். இதனால் விஜய் மற்றும் வெற்றிமாறன் இணையும் படம் தள்ளிப்போகிறது.
விஜய் தரப்பில் வெற்றிமாறன் படங்களை முடித்துவிட்டு வாருங்கள் என சொல்லுகிறார்கள். இதனால் வெற்றிமாறன் தற்போது உள்ள படங்களை முடித்துவிட்டு விஜய்யின் படத்தை இயக்குவதற்கு ஆர்வமாக இருக்கிறார். இதைத்தவிர ஒரு வரியில் கதையை கூறி தளபதியிடம் ஓகே வாங்கிவிட்டார் வெற்றிமாறன். முழு கதையை எழுதி வாருங்கள் என்றும் தளபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
