வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 ஹீரோக்கள்.. சூப்பர் ஸ்டாரை பின்னுக்கு தள்ளிய தளபதி

சில காலங்களுக்கு முன்பு வரை ஹீரோக்களின் சம்பளம் என்பது தயாரிப்பாளர் நிர்ணயிக்கப்படும் ஒன்றாக தான் இருந்தது. அதன் பிறகு கால ஓட்டத்தில் அது ஹீரோ முடிவெடுக்கும் விஷயமாக மாறி இருக்கிறது. இதற்கு படத்தின் பிசினஸ் ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும் ஹீரோக்களுக்கு இருக்கும் தனிப்பட்ட அந்தஸ்தும் இதற்கு காரணம் என்பதை நம்மால் மறுக்க முடியாது. அந்த வகையில் தற்போது அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 ஹீரோக்கள் யார் என்பதை பற்றி இங்கு காண்போம்.

சிம்பு: இடையில் சில காலங்கள் பல சர்ச்சைகளுக்கும், குற்றச்சாட்டுகளுக்கும் ஆளான இவர் தற்போது முழுவீச்சாக படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் இவருடைய கடந்த சில படங்கள் பெரும் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இப்போது அவருக்கான மார்க்கெட்டும் எகிறி உள்ளது. அந்த வகையில் கமல் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்ட படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். அதற்காக இவருக்கு 40 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. அதன்படி இந்த லிஸ்ட்டில் சிம்பு 5 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.

Also read: நா அவ்ளோ சேடிஸ்ட் இல்ல, மீடியாவில் விளக்கம் கொடுத்த லோகேஷ்.. லியோ-வில் உள்ள அல்டிமேட் சீன்

அஜித்: தற்போது பாக்ஸ் ஆபிஸ் ஹீரோவாக உருவெடுத்துள்ள இவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த துணிவு மாபெரும் வெற்றி பெற்றது. அதை அடுத்து இவரின் அடுத்த படமான விடாமுயற்சியை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் இப்படத்துக்காக இவருக்கு 100 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது என தகவல் வெளிவந்தது. ஆனால் உண்மையில் அஜித்தின் சம்பளம் 85 கோடி தான். அந்த வகையில் இந்த டாப் லிஸ்ட்டில் இவர் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.

கமல்ஹாசன்: உலக நாயகனாக கெத்து காட்டி வரும் இவருக்கு விக்ரம் படம் ஒரு வரப் பிரசாதமாக அமைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். சர்வதேச அளவில் கவனம் பெற்ற அப்படத்தை தொடர்ந்து ஆண்டவரின் மார்க்கெட்டும் இப்போது எகிறி உள்ளது. அதனாலேயே இப்போது அவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஆர்வத்துடன் கமிட்டாகி வருகிறார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் மாஸ் காட்டும் இவர் தற்போது ஒரு படத்திற்காக 90 கோடி வரை சம்பளமாக பெறுகிறார். அந்த வரிசையில் இந்த லிஸ்ட்டில் அவர் 3 ஆம் இடத்தை பிடித்துள்ளார்.

Also read: விஜய், அஜித்துக்கு இணையாக சாதனை படைத்த சூரி.. காணாமல் போன சிம்பு!

ரஜினிகாந்த்: சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் கெத்தாக வலம் வரும் இவர் ஒரு படத்தில் நடிக்கிறார் என்றாலே பிசினஸ் தாறுமாறாக உயர்ந்துவிடும். ஆனால் கடந்த சில திரைப்படங்கள் இவருக்கு சாதகமாக அமையவில்லை. அதன் காரணமாகவே அதிக சம்பளம் வாங்கி நம்பர் ஒன் இடத்தில் இருந்த இவர் தற்போது இரண்டாம் இடத்திற்கு சரிந்துள்ளார். அந்த வகையில் சூப்பர் ஸ்டார் இப்போது ஒரு படத்திற்கு 100 கோடி வரை சம்பளமாக பெற்று வருகிறார்.

விஜய்: மாஸ் ஹீரோவாக பாக்ஸ் ஆபிஸை கலக்கி கொண்டிருக்கும் இவர் நடிப்பில் உருவாகி வரும் லியோ மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக அவர் நடிக்கும் தளபதி 68 படமும் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. ஏனென்றால் அப்படத்திற்காக அவருக்கு 200 கோடி சம்பளம் பேசப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நம்பர் ஒன் இடத்தில் இருந்த ரஜினியை பின்னுக்கு தள்ளி இருக்கிறார் விஜய். அந்த வகையில் விஜய் இந்த லிஸ்ட்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார்.

Also read: லால் சலாம் படத்தின் கதை இதுதான்.. உண்மை சம்பவத்தை படமாக எடுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

Trending News