வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரிஸ்க் எடுக்க பயந்து வேண்டாம் என சொன்ன விஜய்.. வெங்கட் பிரபுவை துரத்தி விட்ட தளபதி

Thalapathy shifted the shoot to Russia because he was afraid to take a risk: அரசியல் சதுரங்கத்தில் கவனத்துடன் காய்களை நகர்த்தும் தளபதி, அதிரடியான செயல்களை செய்து பழுத்த அரசியல்வாதிகளுக்கும் டஃப் கொடுத்து வருகிறார். மேலும் தனது திரையுலக வாழ்க்கை, அரசியலை பாதிக்காதவாறு முக்கியமான சில முடிவுகளை மேற்கொண்டு  வருகிறார்.

தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் சுருக்கமாக G.O.A.T என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஜய், பல நட்சத்திர பட்டாளங்கள் ரீ என்ட்ரி கொடுக்கவும், விஜய்யின் அரசியல் வருகையை அறிவித்ததால் கூடுதல் எதிர்பார்ப்புடனும் ரெடியாகி வருகிறது G.O.A.T.

விஜய்  இரு வேடங்களில் கலக்கும் சயின்ஸ் பிக்சன் ஆக்சன் ட்ராமாவான  இத்திரைப்படம், இறுதி கட்ட படப்பிடிப்பை நோக்கி பயணித்து வருகிறது. தற்போது சென்னையில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்ததாக  கிளைமேக்ஸ் காட்சிக்காக ஹைதராபாத் மற்றும் ரஷ்யா செல்ல திட்டமிட்டு உள்ளனர்.

Also read: லெப்ட்ல இண்டிகேட்டர் போட்டுட்டு ரைட்ல திரும்பும் தளபதி.. தேவை இல்லாமல் ஆளும் அரசை வெறுப்பேத்தும் விஜய்

படத்தின் இறுதி காட்சி இலங்கையில் எடுக்கப் பட போவதாக செய்திகள் வந்த நிலையில் இப்போது ரஷ்யா செல்வது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளது. இலங்கையில் படப்பிடிப்பை திட்டமிட்டபோது அங்குள்ள முன்னாள் பிரதமரும் தமிழின செயல்பாடுகளை எதிர்ப்பவருமான ராஜபக்சே அவர்கள் விஜய்யை சந்திக்க ஆர்வம் கொண்டு விஜய்யை வரவேற்க பல ஏற்பாடுகளை செய்துள்ளார்.

இதனை அறிந்து கொண்ட தளபதி, இந்த சந்திப்பு நிகழும் பட்சத்தில் தனது அரசியலுக்கு ஆப்பு வரும் என்பதை நன்கு கணித்து வைத்தார். எனவே அரசியல் ஆசைக்கு பின்னடைவு ஏற்படும் பட்சத்தில் ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று படப்பிடிப்பை இலங்கையில் இருந்து ரஷ்யாவிற்கு மாற்ற சொல்லி உத்தரவிட்டார்.

விஜய்யின் உத்தரவின் பெயரில் மொத்த பட குழுவும் விரைவில் ரஷ்யா செல்ல உள்ளது. மேலும் இந்த மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடித்து மே அல்லது ஜுனில் வெளியிடுவதற்கு தகுந்த ஆயுத்தங்களை செய்து வருகிறது G.O.A.T படக்குழு. ஃபர்ஸ்ட் சிங்கிள் மே மாதம் ரிலீஸ் ஆகும் என இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்

Also read: விஜய்யின் அரசியல் விளம்பரத்தை தடுத்த அஜித்.. இயற்கையாகவே இது நடந்து விட்டது..!

Trending News