தளபதி விஜயின் ரசிகர்களால் தற்போது கொண்டாடப்பட்டு வரும் படம் தான் மாஸ்டர். இந்தப் படம் பல தடைகளை தாண்டி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருவதோடு அமேசான் பிரைம் OTT தளத்திலும் வெளியாகியுள்ளது.
அதேபோல் வெளியான சில நாட்களிலேயே வசூலில் பெரும் சாதனையையும் புரிந்தது மாஸ்டர். இந்த நிலையில் தற்போது தளபதி மற்றும் தல ரசிகர்களுக்கு இடையே இணையத்தில் மாஸ்டர் படத்தை வைத்து பெரும் கலவரம் மூண்டுள்ளது.
அது என்னவென்றால் மாஸ்டர் படத்தில் ஒரு காட்சியில் விஜய்க்கு பேக்ரவுண்டில் இருக்கும் டீக்கடையில் உள்ள நியூஸ் பேப்பரில், ‘அஜித் குதித்ததால் கால் ஜவ்வு கிழிந்தது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனைப் பார்த்த தல ரசிகர்கள், தளபதி விஜய்யை கேவலப்படுத்துவது போன்ற மீம்ஸ்களை உருவாக்கியதை ட்ரெண்டாக்கி வருகின்றனராம்.
மறுபுறம் தளபதி ரசிகர்கள் இதனை பெரும் பிரச்சனையாகி வருகின்றனர். இப்படி ஒரு சாதாரண விஷயத்தை மாறி மாறி பேசி விஜய்யையும் அஜித்தையும் சங்கடத்துக்கு உள்ளாக்குகின்றன. எனவே விஜய்யும் அவ்வாறு யோசித்திருக்க மாட்டார், அஜித்தும் அவ்வாறு யோசிக்கதிருக்க மாட்டார்.
ஆனால் அவர்களுடைய ரசிகர்கள் இவ்வளவு கேவலமாகவும், மட்டமாகவும் யோசிப்பது விஜய்க்கும் அஜித்துக்கும் தான் தலைகுனிவு என்பதை எப்பொழுது புரிந்து கொள்வார்கள் என்பது தெரியவில்லை. மேலும் இந்த ட்விட்டர் பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருவதோடு பலரை எரிச்சலடையச் செய்துள்ளது.
அஜித் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக #DrunkardDonkeyAJITH என்ற ஹேஸ்டேக் ட்விட்டர் தளத்தில் ட்ரெண்டாகி விட்டனர் தளபதி ரசிகர்கள். இப்படி அநாகரீகமாக சம்பந்தமே இல்லாமல் சண்டை போட்டுக்கொள்ளும் தல தளபதி ரசிகர்களை பார்த்து சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
உலகத்தில் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தோம் பத்து பைசா பிரயோஜனம் இல்லாத இதுபோன்ற சம்பந்தப்பட்ட விஷயங்களை தயவுசெய்து டிரென்ட் செய்யாதீர்கள் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.