இந்தியாவில் கடந்த செப்டம்பரில் எக்ஸ் வலைதல பக்கத்தில் அதிகளவு பேசப்பட்ட பிரபலங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் விஜய் 2 ஆம் இடம் பிடித்துள்ளார். அதுகுறித்த விவரங்களை இதில் பார்க்கலாம்.
இந்தியாவில் அதிகளவு பேசப்பட்ட இந்திய X அக்கவுண்ட்களின் பட்டியல்
எக்ஸ் வலைதள பக்கத்தை அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் பயன்படுத்தி வருகின்றனர். அரசியல், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட உலகின் நடைபெறும் எந்த ஒரு சம்பவமும் இதில் டிரெண்டிங்கில் இடம்பெற்று நெட்டிசன்களின் கவனத்தைப் பெறும்.
அந்த வகையில், கடந்த செப்டம்பர் மாதம் இந்தியாவில் அதிகளவு பேசப்பட்ட இந்திய அக்கவுண்ட்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில்
1. பிரதமர் மோடி:
பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார். அவரை டுவிட்டரில் 102.5 மில்லியன் பேர் ஃபாலோ செய்கின்றனர். இந்தாண்டு நடைபெற்ற லோக் சபா தேர்தலில் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
2. தளபதி விஜய்:
எக்ஸ் தளத்தில் விஜய் டாபிக் என்றாலே அது டிரெண்ட் தான். சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் போதே, பிப்ரவரியில் தவெக என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். இதன் முதல் மாநாடு செப்டம்பர் 23 ஆம் தேதி நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டு, பின்னர், வரும் அக்டோபர் 27ல் நடக்கவுள்ளது. எனவே விஜய்யின் அரசியல் பற்றியும், மாநாடு பற்றியும் அதிகளவு பேசப்பட்டுள்ளது.
அதேபோல் கடந்த மாதம் வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய், சினேகா, பிரசாந்த், பிரபுதேவா உள்ளிட்டோர் நடிப்பில் உருவான தி கோட் படம் செப்டம்பர் 5 ஆம் தேதி ரிலீஸானது. தி கோட் படத்தில் அப்பா மகன் என்ற இரு கேரக்டரில் விஜய் மிரட்டியிருப்பதாக கூறப்பட்டு, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒருபுறமும், இப்படம் ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் குவிக்கும் என ஓவர் ஹைப் ஏற்றினர்.
இப்படத்திற்கான அப்டேட், விஜயின் டீ ஏஜிங் இதெல்லாம் அதிகளவில் நெட்டிசன்களால் பேசப்பட்டது. பெரிய எதிர்பார்ப்புகளூக்கு மத்தியில் வெளியாகி இப்படம் ரூ.400 கோடி வரை வசூலித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இவரை 53 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். தமிழ் நடிகர்களில் விஜய் மட்டும் தான் டாப் 10 இடங்களூக்குள் உள்ளார்.
3. விராட் கோலி:
விராட் கோலி உலக பேட்ஸ்மேன்களின் வரிசையில் தனக்கென தனியிடம் வைத்துள்ள கோலி, வங்கதேசத்திற்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியின் போது, 623 இன்னிங்ஸ்களில் 27000 ரன்களைக் கடந்த சச்சினின் {623} சாதனையை முறியடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வகை போட்டிகளிலும் குறைந்த இன்னிங்ஸில் (295) விளையாடி 27,000 ரன்கள் அடித்து, உலக சாதனை படைத்ததுடன், சச்சின், சங்ககாரா, பாண்டிங் ஆகிய வீரர்களின் பட்டியலில் இணைந்தார் கோலி.இந்த சாதனையைப் படைப்பது எளிதல்ல என்பதால், கிரிக்கெட் வீரர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் அமைப்பு, ரசிகர்கள் உள்ளிட்டோர் அவருக்கு வாழ்த்துகள் கூறினர். இது உலக அளவில் டிரென்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. கோலியை எக்ஸ் தளத்தில் 65.3 மில்லியன் பேர் பின் தொடர்கின்றனர். இதையடுத்து,
4. ஜூனியர் என்.டி.ஆர்:
ஆர்.ஆர்.ஆர். படத்திற்கு பின் பான் இந்தியா நடிகராக மாறியுள்ள நிலையில் கொரட்டல சிவா இயக்கத்தில் அவர் நடிப்பில் செப்டம்பர் 27 -ல் வெளியான தேவரா, ரூ.400 கோடிக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளது.
இப்படத்தின் புரொமோ ரிலீஸின் போது ரசிகர்கள் ரகளை, ஜுனியர் என்.டி.ஆர் பேசிய வீடியோ வைரல், இப்பட போஸ்டர், அப்டேட்டுகள், படம் சரியில்லை என பெங்களூர் தியேட்டரில் அவரது போஸ்டர் எரிப்பு என செப்டம்பர் முழுவதும் அவரை பற்றியும் அப்படத்தையும் பற்றி டிரெண்டாகி பேசு பொருளானது. ஜூனியர் என்.டி.ஆரை எக்ஸ் தளத்தில் 7.7 மில்லியன் பேர் ஃபாலோ செய்கிறார்கள்.
5. பவன் கல்யாண்:
ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திருப்பதி லட்டு விவகாரத்தில் அவர் 11 நாட்கள் தவமிருந்தது. மெய்யழகன் பட புரமோசன் நிகழ்ச்சியின்போது, லட்டு விவகாரம் பற்றி கார்த்தியின் பதிலுக்கு, டென்சனான பவன் கல்யாண் எச்சரிக்கை விடுத்தார். இது தமிழ், தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரப்பாகவே கார்த்தி, சூர்யா இருவரும் மன்னிப்பு கேட்டனர். பிறகு கார்த்தியின் செயலை பாராட்டினார் பவன் கல்யாண். அதேபோல், முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியின் தான் லட்டு விவகாரத்தில் குளறுபடி நடந்ததாக கூறினார். இதற்கு முன்னாள் முதல்வர் ஜெகன்மோன் ரெட்டி, நடிகை ரோஜா உள்ளிட்டோர் எதிர்வினை ஆற்றினார். இதில் அதிகளவு பவன் கல்யாண் பேசப்பட்டதுடன், ட்ரோலுக்கும் ஆளானார்.
இதையடுத்து, இப்பட்டியலில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் 6வது இடத்திலும், காங்கிரஸ் எம்பி., ராகுல் காந்தி 7 வது இடத்திலும், இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மார் 8வது இடத்திலும், தோனி 9 வது இடத்திலும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 10 வது இடத்திலும் உள்ளனர்.