சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

புட்ட பொம்மா நடிகைக்கு தளபதியுடன் நடிக்க பயமா.? இந்த விஷயத்தில் அவர் தான் கிங்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சனின் அதிரடி படைப்பாக உருவாகி வருகிறது “பீஸ்ட்”. சமீபத்திவ் படத்தின் பர்ஸ்ட்லுக் பட்டையை கிளப்பிய சில தினங்களில் இருந்தே படத்தின் எதிர்பார்ப்பு அதிகரிக்க துவங்கியுள்ளது.

எதிர்பார்ப்புகளை இன்னும் அதிகரித்த அன்பறிவு மாஸ்டரின் பேட்டி எட்டாம் கட்டத்தில் இருந்து என்பதாம் கட்டத்திற்கே நகற்றிவிட்டது.

இப்படத்தில் தளபதிக்கு ஜோடியாக பூஜா ஹெக்தே நடித்து வருகிறார் என்பது பலரும் அறிந்ததே. இவர் தமிழில் ஜீவாவுடன் ஜோடிபோட்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் அவருக்கு இரண்டாவது படமாக பீஸ்ட் ஒப்பந்தமாகியுள்ளது. டான்ஸில் அடித்துநொறுக்கும் பூஜா கடந்த ஆண்டு அல்லு அர்ஜூனுடன் ஜோடி போட்டு நடித்த “அலா வைகுண்டபுரம்” படத்தின் புட்ட பொம்மா யூ டியூப்பை தெறிக்க விட்டது.

தலையாட்டி பொம்மை போன்ற ஒற்றை நிமிட நடனத்திற்கு வெகு காலம் ப்ராக்டிஸ் பன்னிய அம்மணிக்கு தளபதியுடன் ஆட்டம் போட வேண்டும் என்ற உடன் ஆட்டம் கண்டது போலும் ஆணிவேர்.

சவுத் இந்தியன் கிங் ஆஃப் டான்ஸ் நடிகருடன் ஆட வேண்டும் எனில் டான்ஸ் மாஸ்டர்களுக்கே கடினம் தானே. தளபதியுடன் ஆடுவதற்காக சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார் அம்மணி.

beast-vijay
beast-vijay

Trending News