செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

உங்க முகத்துல இதுதான் ஸ்பெஷல்.. பிக் பாஸ் ராஜீவை கூப்பிட்டு பாராட்டிய விஜய்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 5 சீசனின் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜு தற்போது பல ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகிறார். அதில் அவர் ஆரம்ப வாழ்க்கையில் பட்ட கஷ்டங்கள், வாய்ப்பு தேடி அலைந்தது போன்றவற்றை பகிர்ந்து வருகிறார்.

பிக்பாஸ் முடிந்த பிறகு டாக்டர் படத்தை பார்க்கவேண்டும் என ராஜு விரும்பினாராம். ஏனென்றால் டாக்டர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இடம் ஐந்து வருடம் உதவி இயக்குனராக ராஜு பணியாற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து வலிமை படம் பொங்கலுக்கு வெளியாகியிருக்கும் அதையும் பார்க்க வேண்டும் என நினைத்தாராம்.

ஆனால் எதிர்பாராத விதமாக கொரோனா பரவல் காரணமாக வலிமை படம் வெளியாகவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன்பு நெல்சன் இயக்கிவரும் பீஸ்ட் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு ராஜு சென்று இருந்தாராம்.

செட்டில் யாராவது புதிதாக வந்தால் தளபதி விஜய் உடனே கண்டுபிடித்து விடுவாராம். அன்று ராஜு செல்லும்பொழுதும் தளபதி ராஜுவை அழைத்து யார் என்று கேட்டாராம். அப்போது நான் நெல்சன் உடன் வேலை செய்துள்ளேன் என்றாராம். ராஜு உடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த விஜய் உங்கள் கண்கள் மிகவும் பயங்கரமாக உள்ளது இதுதான் உங்களுக்கு பிளஸ் அதுதான் என பாராட்டினாராம்.

அப்போது ராஜு சிறுவயதிலிருந்தே விஜய்க்காக சேர்த்து வைத்திருந்த ஒரு புத்தகத்தை விஜய்யிடம் கொடுத்தாராம். அதைப் பார்த்த விஜய் அந்த புத்தகத்தில் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தாராம். இந்த சுவாரஸ்யமான தகவலை ஒரு பேட்டியில் ராஜூ கூறியுள்ளார்.

தளபதி விஜய் நண்பரான சஞ்சீவ் பிக் பாஸ் வீட்டுக்கு சென்று வெற்றி பெற முடியவில்லை. ஆனால் தளபதி பாராட்டிய ராஜு பிக்பாஸ் பட்டத்தை வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் ராஜு பல வெற்றிகளை சந்திப்பார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News