செவ்வாய்க்கிழமை, நவம்பர் 19, 2024

விஷாலுக்கு இருக்கும் தைரியம் விஜய்க்கு இல்லையே.. நீங்க வந்து என்ன பண்ணப் போறீங்க தளபதி

Thalapathy Vijay: இந்த வருடம் முழுக்க சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் அதிகமாக பேசியது நடிகர் விஜய் பற்றி தான். விஜய்யின் அடுத்த நகர்வு அரசியல் தான் என்பதுதான் எல்லோருடைய கருத்தாகவும் இருந்தது. அதற்கு ஏற்றவாறு விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளால் அவருக்கு ஓவர் பில்டப் கொடுக்கப்பட்டது. தற்போது அதை மொத்தமாக நடிகர் விஷால் டம்மியாக்கி இருக்கிறார்.

அரசியலுக்கு முக்கியமான தகுதி என்பதே நடக்கும் தப்புகளை தைரியமாக எதிர்த்து கேள்வி கேட்பதுதான். கேள்வி கேட்டவர்கள் எல்லாம் ஜெயித்தார்களா என்று கேட்டால் அது சந்தேகம்தான். ஆனால் எதிர்த்து கேள்வி கேட்டவர்கள் அத்தனை பேரும் மக்கள் மனதில் நிலைத்து நின்றார்கள். இந்த விஷயத்தில் விஜய் மொத்தமாக கோட்டை விட்டிருக்கிறார்.

அறிக்கை வெளியிட்ட தளபதி

கடந்த வாரம் மிக்ஞாம் புயல் ஒட்டுமொத்த வட தமிழகத்தையும் உலுக்கிவிட்டு போயிருக்கிறது. புயலின் தாக்கம் இல்லை என்றாலும் அதை விட்டுப் போன சுவடுகளால் இன்று வரை மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்கள். நடிகர் விஜய் புயல் ஓய்ந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கும் படியும், அவர்களால் முடிந்த உதவியை செய்யும் படியும் சொல்லி இருந்தார்.

Also Read:கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்த விஜய் மற்றும் எஸ் ஏ சி.. தலையில துண்டை போட்ட தயாரிப்பாளர்..!

எப்போதுமே விஜய் வெளியிடும் அறிக்கைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும். ஆனால் இந்த முறை அந்த அறிக்கையை யாருமே கண்டு கொள்ளவில்லை. இதற்கு காரணம் விஜய் பொத்தாம் பொதுவாக பேசியிருந்த விஷயம் தான். அரசியலுக்கு வர வேண்டும் என்று துடிக்கும் ஒரு தலைவன் மக்கள் படும் அவதிகளை பற்றி வாய் திறக்காமல் இருப்பது தான் எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.

மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படும் அளவிற்கு முன்னெச்சரிக்கை எடுக்காமல் இருந்த ஆளும் கட்சியை எதிர்த்து விஷால் தைரியமாக வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை பார்த்துவிட்டு சென்னை மாநகர மேயர் பிரியா பதில் சொல்லும் அளவிற்கு அவர் பேசிய வார்த்தை ரீச் ஆகி இருந்தது. ஆனால் இதைப்பற்றி விஜய் எதுவுமே பேசவில்லை.

அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைப்பதே அல்லல்படும் மக்களை காப்பாற்றுவதற்காக தான் என்றால் இது போன்ற ஒரு சூழ்நிலையில் தவறை தட்டிக் கேட்டே ஆக வேண்டும். அரசியல் எண்ணமே இல்லை என்று சொல்லும் விஷால் தைரியமாக கேள்வி கேட்கும் பொழுது, தளபதி வாயை மூடிக்கொண்டு இருக்கிறார். எந்த கேள்வியும் கேட்காமல் இவர் அரசியலுக்கு வந்து என்ன செய்வார் என மக்கள் இப்போது கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Also Read:தலைவனுக்கு உண்டான தகுதியை இழந்த விஜய்.. 48 மணி நேரம் கழித்து வெளியான அறிக்கையால் வெடித்த சர்ச்சை

- Advertisement -spot_img

Trending News