ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

கோமாவில் இருந்த மகன்.. நாசருக்காக தவறாமல் விஜய் கொடுக்கும் சர்ப்ரைஸ்

Vijay, Nassar: நாசர் பல வருடமாக சினிமாவிலேயே ஊறிப் போனவர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தன்னுடைய நடிப்பை பல மடங்கு கொட்டக்கூடியவர். அந்த வகையில் கராரான அப்பாவாக எம்டன் மகன், வில்லனாக பாகுபலி என இவர் நடிக்காத கதாபாத்திரங்களை இல்லை என்று சொல்லும் அளவுக்கு எக்கசக்க படங்களை கொடுத்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி எல்லா மொழிகளிலும் நாசர் நன்கு பரிச்சயமானவர் என்பதால் பான் இந்திய மொழி படங்கள் நாசரை நடிக்க வைக்க இயக்குனர்கள் முன் வருகிறார்கள். இந்நிலையில் நாசருக்காக விஜய் ஒவ்வொரு வருடமும் தவறாமல் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்து வருகிற செய்தி பலரும் அறியாத ஒன்று.

Also Read : 9 கோடி வாங்கி ஏமாற்றிய விஜய் வில்லன்.. டேக் ஆப் ஆன உடனே அதல பாதாளத்திற்கு சென்ற படம்

அதாவது விஜய்க்கு என்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அப்படி நாசரின் மூத்த மகனும் விஜய்யின் தீவிர ரசிகராம். இந்நிலையில் கமலின் உத்தம வில்லன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது நாசருக்கு ஒரு போன் கால் வந்துள்ளது. அப்போது அவரது மகனுக்கு விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

உடனடியாக படப்பிடிப்பு தளத்திலிருந்து நாசர் கிளம்பி உள்ளார். இந்த விபத்தின் காரணமாக நினைவை இழந்து கோமா நிலைக்கு நாசரின் மகன் சென்றுள்ளார். அப்போது அவரது மகனுக்கு நினைவில் இருந்த ஒரே விஷயம் விஜய் மட்டும் தானாம். அடிக்கடி விஜய்யின் பெயரை மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தார்.

Also Read : விஜய்க்கு ஆபத்தை ஏற்படுத்திய ஓவர் நெருக்கம்.. பேசி பேசியே பழைய குட்டையை தோண்டிய கௌதம் மேனன்

இதனால் நாசர் விஜய்க்கு போன் செய்த இந்த விஷயத்தை கூறியிருக்கிறார். அந்த நேரத்தில் படப்பிடிப்பில் விஜய் இருந்ததால் ஊருக்கு வந்த உடனே நாசரின் வீட்டிற்கு சென்ற அவரது மகனைப் பார்த்து இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் விஜய் ஊரில் இருந்தால் நாசரின் மகன் பிறந்தநாள் அன்று கேக்குடன் அவர் வீட்டுக்கு சென்று சர்ப்ரைஸ் கொடுப்பாராம்.

இதற்கு நாசரின் மனைவியும் ட்விட்டர் மூலமாக விஜய்க்கு பலமுறை நன்றி கூறியிருக்கிறார். சிறு வயது முதலே விஜய்யின் நடிப்பு, நடனம் ஆகியவற்றில் நாசர் மகனுக்கு இருந்த ஈடுபாடு காரணமாக பெற்றோரைக் காட்டிலும் விஜய் மீது அவ்வளவு அன்பாக இருந்துள்ளார். விஜய் இதை பார்த்து வியந்து நாசர் மகனுக்காக இந்த உதவியை செய்து வருகிறார்.

Also Read : கெஞ்சாத குறையாக கெஞ்சி விஜய் பட வாய்ப்பு வாங்கிய நடிகர்.. இதை விட்டால் சினிமாவில் வளர வேற வழியில்லை.!

Trending News