வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிளாப் படத்தை பார்த்து உஷாரான தளபதி விஜய்.. அடுத்த விக்னேஷ் சிவன் நீங்க தான் ப்ரோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விஜய் அவருடைய 67வது படமான லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்திருக்கிறது. மீதமுள்ள படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்தப் படம் ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது வரை ரசிகர்கள் அதிகமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவ்வளவு விறுவிறுப்பை நாலா பக்கமும் எகிற வைத்து வருகிறது.

மேலும் இப்படம் முடிந்த கையோடு இவருடைய அடுத்த படமான 68வது படத்தையும் முடிவு செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. அதற்காக ஒவ்வொரு இயக்குனர்களும் போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இவருடைய அடுத்த படத்தை வெங்கட் பிரபு தான் இயக்கப் போகிறார் என்று முடிவான நிலையில் இதற்கு புதிதாக ஒரு பிரச்சனை பூதாகரமாக உருவாகி வருகிறது.

Also read: ரகசியத்தை போட்டு உடைத்த சிம்பு.. தளபதி-68 உறுதியாகும் நேரத்தில் வெங்கட் பிரபுவுக்கு வைத்த சூனியம்

அதாவது வெங்கட் பிரபு மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இவருக்கு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த படங்களும் ஹிட் கொடுக்கவில்லை. அதன் பின் வந்த மன்மத லீலை சரியான பிளாப். அதுவும் இவர் இப்படி ஒரு படமா எடுக்க வேண்டும் என்று சொல்லும் அளவிற்கு 18 பிளஸ் படமாக கொடுத்தார். அதாவது ஏதோ ஒரு சின்ன ஹீரோ அதனால் கூடபடம் ஓடவில்லை என்று சொல்லலாம்.

ஆனால் இப்பொழுது நாகை சைதன்யாவை வைத்து கஸ்டடி என்னும் படத்தை எடுத்தார். ஆனால் அது செம மொக்கை வாங்கி உள்ளது. பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில் எல்லாரையும் ஏமாற்றும் விதமாக படம் கொஞ்சம் கூட ஓடவில்லை. இப்படி மாநாடு படத்திற்கு பிறகு இயக்கிய படங்கள் அனைத்தும் தோல்வி படமாக வருவதால் இவருடைய அடுத்த படம் கேள்விக்குறியாக இருக்கிறது.

Also read: வெங்கட் பிரபுவுடன் இணையும் மாஸ் இயக்குனர்.. லியோவை மிஞ்சும் தளபதி 68 அப்டேட்

விஜய் எப்படி தளபதி 68 படத்தை இவரிடம் ஒப்படைப்பார். யாராக இருந்தாலும் யோசிக்க கூடிய விஷயம்தான் அப்படி இருக்கையில் தளபதி யோசிக்க மாட்டாரா. தொடர்ந்து வெங்கட் பிரபு பிளாப் படம் கொடுத்ததால் விஜய் உஷாராகி விட்டார் என்றே சொல்லலாம். அத்துடன் இப்படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனமும் இவரை நம்பி இறங்கலாமா என்று யோசித்து வருகிறார்.

இதே நிலைமைதான் விக்னேஷ் சிவனுக்கும் ஏற்பட்டது. இவர் சொன்ன கதை மேல் நம்பிக்கை இல்லாததால் அஜித் மற்றும் லைக்கா நிறுவனம் இவரே ரிஜெக்ட் செய்தது. அதே போல தான் தற்போது வெங்கட் பிரபுவும் இருக்கிறார். விக்னேஷ் சிவனைத் தொடர்ந்து அடுத்து இவரும் அந்த லிஸ்ட்டை பிடித்துக் கொண்டார். இப்படி முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் விஜய் தற்போது கதைக்காக இயக்குனர்களை கழற்றி விடுகிறார்கள்.

Also read: தளபதி 68க்கு அவர் வேண்டவே வேண்டாம்.. வெங்கட் பிரபுவின் அடிமடியில் கைவைத்த விஜய்

Trending News