வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

கடைசி நாள் ஷூட்டிங்கை முடித்த தளபதி.. நெல்சன் கட்டிப்பிடித்தபடி வெளியான புகைப்படம்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் பீஸ்ட் திரைப்படம் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் பாலிவுட் நடிகை பூஜா ஹெக்டே, செல்வராகவன், சதீஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது.

பீஸ்ட் படத்தின் முதல் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நடந்து முடிந்த நிலையில் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு வேகமாக நடந்து வந்தது. விரைவில் படப்பிடிப்பை முடிக்கும் திட்டத்துடன் படக்குழு முழுவேகத்துடன் இரவு, பகல் பாராது படப்பிடிப்பை நடத்தி வந்தனர்.

ஏற்கனவே படத்தின் நாயகி தன்னுடைய காட்சிகள் முடிவடைந்து விட்டதாக சமீபத்தில் அறிவித்தார். அதைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய் பங்கேற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளதாக தெரிகிறது. இது சம்பந்தப்பட்ட போட்டோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

அதில் நெல்சன் திலீப்குமாரும், தளபதி விஜய்யும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி இருக்கின்றனர். இதுகுறித்து தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் இது தளபதி விஜயின் பீஸ்ட் பட கடைசி நாள் ஷூட்டிங் என்றும், இது ஒரு சிறப்பான தருணம் என்றும் பதிவிட்டுள்ளனர்.

ரசிகர்கள் பெரிதும் ஆர்வத்துடன் காத்திருக்கும் இந்த படத்தின் டிரைலர் மற்றும் ரிலீஸ் தேதி ஆகியவை விரைவில் வெளியாக உள்ளது. தற்போது விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்த நிலையில் பட வெளியீட்டுக்கான அடுத்த கட்ட வேலைகளில் படக்குழுவினர் இறங்கி உள்ளனர்.

beast
beast

Trending News