புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அஜித் இயக்குனர்களை டார்கெட் பண்ணும் விஜய்.. அடுத்த லிஸ்டில் இருக்கும் மோஸ்ட் வான்டட் டைரக்டர்

Thalapathy Vijay – Ajith Kumar: நடிகர் அஜித்குமார் மற்றும் தளபதி விஜய் இருவருமே சமகாலத்து போட்டியாளர்கள் என்பது அனைவருமே அறிந்த விஷயம் தான். இருந்தாலும் கடந்த சில வருடங்களாகவே இவர்களுடைய பாதை தனித்தனி என்று ஆகிவிட்டது. அஜித் தனக்கு பிடித்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து ஒரு பக்கம் நடித்து வர, தளபதி விஜய் அடுத்தடுத்து சரவெடி போல் மாஸ் மற்றும் கிளாஸ் ஆன படங்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

பல வருடங்களுக்குப் பிறகு இவர்கள் இருவரின் படங்களும் கடந்த பொங்கல் அன்று மோதிப் பார்த்தன. அந்தப் போட்டியிலும் யாருக்கு வெற்றி, யாருக்கு தோல்வி என்று வெளிப்படையாக தெரியாமலேயே டிராவில் முடிந்தது. இந்த நிலையில் விஜய் தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் வெற்றிக்காக புது ரூட்டை போட்டுக் கொண்டிருக்கிறார். இதற்காக தொடர்ந்து அஜித்தை வைத்து ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர்களை பாலோ செய்து வருகிறார்.

Also Read:ஒரே அடி தான் மிஸ் ஆகவே கூடாது.. தடைகளை உடைத்து பக்கா பிளான் போட்டு தயாராகும் விஜய்

நடிகர் அஜித்குமாரை வைத்து மங்காத்தா என்னும் பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் விஜய் தற்போது கைகோர்த்து இருக்கிறார். லியோ படத்தின் ரிலீஸுக்கு பிறகு இந்த கூட்டணியில் தளபதி 68 படம் உருவாக இருக்கிறது. மேலும் இந்த படத்தில் ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்க இருப்பதாக தெரிகிறது.

தற்போது இந்த லிஸ்டில் இயக்குனர் ஹெச். வினோத்தும் இணைந்திருக்கிறாராம். நடிகர் அஜித்குமாருக்கு அடுத்தடுத்து நேர்கொண்ட பார்வை, வலிமை மற்றும் துணிவு என்ற மூன்று படங்களை கொடுத்தவர் இவர். அதிலும் துணிவு படம் எந்த ஒரு நெகட்டிவ் விமர்சனங்களையும் பெறாமல் வெற்றியடைந்ததோடு, அஜித்திற்கு பல வருடங்களுக்குப் பிறகு கிடைத்த ஹிட் படமாகவும் அமைந்துவிட்டது.

Also Read:இந்த 13 இடங்களில் வெட்டி விட்ட சென்சார் போர்டு.. இதுவரை விஜய் படத்திற்கு நடக்காத கெட்டபெயர்

துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து தான் உலக நாயகன் கமலஹாசன் ஹெச். வினோத்துக்கு தன்னுடைய 233 வது படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார். இந்த படத்தின் வேலைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அக்டோபர் மாத இறுதியில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் தளபதி விஜய் வினோத்திடம் கதை கேட்டு இருக்கிறார்.

தளபதி விஜய் தன்னுடைய 68வது படத்தில் நடித்து முடித்த கையோடு கமலின் படம் வெற்றி பெறுவதை பொருத்து இந்தக் கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெங்கட் பிரபுவை தொடர்ந்து விஜய் தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் வெற்றிக்காக அஜித் இயக்குனர்களை பாலோ செய்து நடிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:லியோ படத்தில் இதுவரை தெரியாத 5 ரகசியங்கள்..150 நாளா மைனஸ் டிகிரியில் விஜய் செய்த வேலை

Trending News