புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மல்டி ஸ்டார் கூட்டணியில் உருவாகும் தளபதி 69.. விஜய் உடன் கைகோர்க்கும் டாப் நடிகர்

Thalapathy 69: தளபதி விஜய் ரசிகர்கள் விரைவில் ரிலீஸ் ஆகும் GOAT படத்திற்காக உற்சாகமாக காத்திருக்கிறார்கள். அதற்குள் தளபதி 69 படத்தின் அப்டேட் வெளியாகி டபுள் குஷி கொடுத்திருக்கிறது. தளபதி 69 தான் விஜய் நடிக்க போகும் கடைசி படம்.

அதன்பின்னர் அவர் முழு நேர அரசியலில் இறங்க இருக்கிறார். இதனாலேயே அந்த படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. மேலும் விஜய் தன்னுடைய அரசியல் நோக்கத்தை முழுவதுமாக இந்த படத்தில் மக்களுக்கு சொல்ல முயற்சி செய்ய இருக்கிறார்.

அதற்கு ஏற்ற கதை களத்துடன் வரும் இயக்குனர்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பதாக சொல்லப்பட்டது. தற்போது நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் எச் வினோத் தான் தளபதி 69 படத்திற்கு இயக்குனர் என தெரிய வந்திருக்கிறது.

விஜய் உடன் கைகோர்க்கும் டாப் நடிகர்

விஜய்க்கு ஏற்ற அரசியல் களத்துடன் வினோத் கதை சொல்லியதாகவும், அதற்கு விஜய் ஓகே சொல்லி விட்டதாகவும் தெரிகிறது. தற்போது படத்தின் அடுத்த கட்ட அப்டேட் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் முக்கியமான கேரக்டரில் கேரள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்க இருக்கிறார்.

சமீபத்தில் வினோத் மோகன் லால் இடம் கதை சொல்லி, அவருக்கு கதை பிடித்து விட்டதாக சொல்லப்படுகிறது. கிட்டதட்ட 10 வருடங்களுக்கு முன் விஜய் மற்றும் மோகன்லால் ஜில்லா படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள்.

அப்போதே இருவருக்குள்ளும் நல்ல நட்பு ஏற்பட்டு விட்டது. மீண்டும் தளபதி 69 படத்தில் இரண்டாவது முறையாக இணைகிறார்கள். GOAT செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், தளபதி 69 படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் ஆரம்பிக்கிறது.

Trending News