வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கமல், கார்த்தி படத்தில் இணைய போகும் விஜய்.. லோகேஷ் கனகராஜின் அடுத்த பிளான் இதுதானா!

லோகேஷ் கனகராஜ் எப்போதுமே வித்தியாசமான கதை களங்களில் படம் எடுக்கக் கூடியவர். இவருடைய திரைப்படங்களின் கதைப்போக்கை அவ்வளவு எளிதாக யாராலும் யூகித்து விட முடியாது. இதனாலேயே லோகேஷ் கனகராஜ் படங்கள் பயங்கர ஹிட் அடித்து விடும்.

மேலும் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இவர் லோகேஷ் சினிமாமேட்டிக் என்பதை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இவருடைய படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கும். இவர் இயக்கிய மாநகரம், மாஸ்டர் திரைப்படங்களைத் தவிர மற்ற எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது தான்.

Also Read: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்.. வாரிசு படத்தை வைத்து பிளான் போட்ட சன் டிவி

அதேபோன்றுதான் தளபதி விஜய்யை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் தளபதி 67ல் தன்னுடைய முந்தைய படங்களின் தொடர்ச்சியை காட்ட விரும்புகிறாராம். அப்படிப் பார்த்தால் லோகேஷ் கனகராஜ் தளபதி 67 க்கு பிறகு இயக்க இருக்கும் திரைப்படம் கைதி 2. அதன்படி தளபதி 67 இல் கைதி 2 சம்பந்தப்பட்ட காட்சிகளை இணைக்க இருக்கிறாராம்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து மிகப்பெரிய ஹிட் அடித்த விக்ரம் படத்தை பொறுத்த வரைக்கும், கைதி படத்தின் கிளைமாக்ஸ்சில் கார்த்தி கொண்டு செல்லும் லாரியை வைத்து தான் படத்தின் கதையே . விக்ரம் கிளைமாக்ஸ்சிலும் கைதி சம்பந்தப்பட்ட காட்சியும் இருக்கும்.

Also Read: ஹைதராபாத்தில் வாரிசு படக் குழுவுக்கு விஜய் கொடுத்த ஸ்பெஷல் ட்ரீட்.. வைரலாகும் சக்சஸ்மீட் புகைப்படங்கள்

இப்போது தளபதி 67ஐயும் தன்னுடைய முந்தைய படங்களில் இணைக்க இருப்பதால் கண்டிப்பாக அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் கைதி 2, விக்ரம் 2 படங்களில் நாம் விஜய்யை எதிர்பார்க்கலாம். ஒரே படத்தில் கமல், கார்த்தி விஜய் இணைந்தால் அந்தப் படத்தின் பிரம்மாண்டம் இந்திய சினிமாவே வியக்கும் வகையில் இருக்கும்.

நடிகர் விஜய்யை பொறுத்த வரைக்கும் அவர் இதுபோன்று மல்டி ஸ்டார்ஸ் படங்களில் அவ்வளவாக நடித்ததில்லை. மேலும் அவருடைய படங்களும் இரண்டாம் பாகம் என்று இதுவரை வெளிவந்ததில்லை. எனவே இது விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமையும். ஏற்கனவே தளபதி 67ல் மிஸ்கின், அர்ஜுன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் நடிப்பதே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.

Also Read: தளபதி-67 ரிலீஸ் தேதியை லாக் செய்த லோகேஷ்.. விஜய்க்கு 2023 பிளாக்பஸ்டர் ஹிட் கன்ஃபார்ம்

Trending News