செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024

பண ஆசையா, இல்லை பதவி ஆசையா.. தளபதி விஜய் தேர்ந்தெடுக்க போகும் வழி?

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். தற்போதைய நிலவரப்படி பாக்ஸ் ஆபீஸ் கிங் என்று கூட இவரை சொல்லலாம். கடந்த நான்கைந்து வருடங்களுக்கு மேலாக விஜய்யின் படங்கள் 100 கோடி வசூலை தாண்டி வருகின்றன. அதனால் இவருடன் படம் பண்ண தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு காத்துக் கிடக்கின்றன. விஜய்யும் அதற்கு ஏற்றவாறு கொஞ்சமும் ஓய்வில்லாமல் அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த சில வருடங்களாகவே நடிகர் விஜய் தான் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கூட அவருடைய ரசிகர்களும், பல சினிமா பிரபலங்களும் சொல்லி வருகிறார்கள். வாரிசு படத்தின் ரிலீஸ் சமயத்தில் இந்த பேச்சு பூதாகரமாகவே வெடித்தது. அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதை தாண்டி தமிழ் சினிமாவில் விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று கூட அழுத்தம் திருத்தமாக பேச்சுக்களும் எழ ஆரம்பித்தன. விஜய்யும் இதற்கு மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வருகிறார்.

Also Read:கமல்,விஜய்யுமே இன்னும் வெயிட்டிங் லிஸ்ட் தான்.. அலட்சியம் செய்யும் தாடிக்கார இயக்குனர்

சினிமாவில் தான் இப்படி ஒரு போட்டி என்றால் விஜய்யின் பெயர் அடுத்த பிரபலமாகி கொண்டிருப்பது அரசியல் களத்தில். இதற்கு முக்கிய காரணமே விஜய் தான். தன்னுடைய மக்கள் இயக்கம் நிர்வாகிகளை வைத்து விஜய் அடுத்தடுத்து செய்து வரும் செயல்கள் கண்டிப்பாக இவர் அரசியலுக்குள் வருவார் என்பதை மறைமுகமாகவே தமிழக மக்களுக்கு உணர்த்தி வருகிறது.

விஜய்க்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அரசியல் என்று வந்துவிட்டால் கண்டிப்பாக அவரால் சினிமாவில் நடிக்க முடியாது. சினிமாவில் இருந்து ஒதுங்கியே ஆக வேண்டும் என்ற முடிவை அவர் எடுத்தே ஆக வேண்டும். சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டால் விஜய்க்கு அரசியல் மூலம் பணம் வருவதற்கும் வாய்ப்புகளே இல்லை. என்னதான் ரசிகர்கள் அதிகமாக இருந்தாலும் அரசியலில் ஜெயிக்க அது மட்டும் போதாது.

Also Read:ஒரு ஹிட் படம் கொடுத்த முரட்டு தைரியம்.. என் கதைக்கு நான் தான் ஹீரோ, விஜய்க்கு நோ சொன்ன பிரதீப்

தமிழ் சினிமா ஹீரோக்களில் மக்கள் திலகம் எம்ஜிஆர் தவிர அரசியல் என்று வந்த எந்த ஹீரோக்களும் நிலைத்து நிற்கவில்லை. அப்படி இருக்கும்பொழுது ஒரு படத்திற்கு 200 கோடி சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் தளபதி விஜய் சினிமாவை விட்டு ஒதுங்கி அரசியலுக்கு வருவதெல்லாம் கண்டிப்பாக நடக்காத ஒன்று. ஒருவேளை பணம் தேவையில்லை, பதவி இருந்தால் போதும் என்று முடிவெடுத்து இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

தளபதி விஜய் படம் நடித்து கோடிக்கணக்கில் சம்பாதிக்க போகிறாரா அல்லது இத்தனை வருட சினிமாவில் சம்பாதித்தது போதும் என்று பதவிக்காக போராட போகிறாரா என்பது 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கும் பொழுது வெட்ட வெளிச்சம் ஆகிவிடும். தற்போதைக்கு தன்னுடைய 68வது படத்திற்கான முழு வீச்சில் இறங்கி இருக்கிறார் விஜய்.

Also Read:வேற லெவலில் உருவாகும் தளபதி 68 ப்ரோமோஷன் வீடியோ.. பிக் பாஸ் பிரபலத்தை ஸ்கெட்ச் போட்ட தூக்கிய வெங்கட் பிரபு

- Advertisement -spot_img

Trending News