வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

லியோவால் பல லட்சம் நஷ்டம்.. வாயை திறக்காமல் கம்முனு உம்முனு இருக்கும் தளபதி

Thalapathy Vijay – Leo Movie: தளபதி விஜய் நடித்த லியோ படம் வரும் 19ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு ரொம்பவும் அதிகமாக இருக்கிறது. விஜய்யின் மற்ற முந்தைய படங்களை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது லியோ மீதான எதிர்பார்ப்பு படம் ஆரம்பித்ததில் இருந்தே அதிகரித்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படத்தில் இணைந்திருக்கும் நட்சத்திர பட்டாள்களும் தான்.

விஜய் ரசிகர்கள் இப்போது லியோ படத்தை முன்பை விட அதிகமாக கொண்டாடி தீர்க்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதிகம் எதிர்பார்த்த இசை வெளியீட்டு விழா நடக்காமல் போக, அந்த ஏமாற்றத்தை சரிக்கட்டும் வகையில் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பத்து ரூபாய் டிக்கெட்டில் ரோகினி தியேட்டரில் இந்த ட்ரெய்லர் ஒளிபரப்பப்பட்டது.

Also Read:ஜெய்ப்பதற்கு ரஜினி பயன்படுத்தும் ஃபார்முலா.. அப்படியே கெட்டியாக பிடித்துக்கொண்ட விஜய்

அந்த கொண்டாட்டத்தின் உச்சகட்டமாக விஜய் ரசிகர்கள் ரோகினி தியேட்டரை அதகளப்படுத்தி விட்டார்கள். இந்த தியேட்டர் சேதமடைந்தது மிகப்பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில், தற்போது இதைப்பற்றிய அதிகமான விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதாவது இந்த தியேட்டரில் கிட்டத்தட்ட 600 சீட்டுகள் சேதமடைந்து இருக்கின்றன.

தியேட்டரில் கேட், பேரி கேட், இரும்பு தூண் போன்றவைகளும் சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதன் மதிப்பு கிட்டத்தட்ட 25 லட்சத்திலிருந்து 35 லட்சம் என தெரிகிறது. தியேட்டர் உரிமையாளரால் இந்த தொகையை இன்சூரன்ஸ் மூலம் பெற முடியாது. இதற்கு காரணம் அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் விஜய் ரசிகர்களுக்கு இது போன்ற காட்சியை தயார் செய்து கொடுத்தது தான்.

Also Read:விஜய், லோகேஷ் சண்டையில் சிக்கிய விக்கி.. பகிரங்கமாக கேட்ட மன்னிப்பு

இதுபோன்ற நிகழ்வுகளுக்கு காவல்துறை பொறுப்பில்லாமல் நடந்து கொண்டது தான் காரணம் என்று ஒரு பக்கம் சொல்லப்படுகிறது. சமீபத்தில் உயர்நீதிமன்றம் இது போன்ற வழக்குகளை நாங்கள் முன்வந்து விசாரிக்கலாம். ஆனால் அது விஜய் ரசிகர்களுக்கு எதிராக மாறிவிடும் , புகார் வந்தால் கண்டிப்பாக இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லிவிட்டது.

இப்படி ஒரு சம்பவம் நடந்தும், தளபதி விஜய் இதை பற்றி பேசாமல் ரொம்பவும் மௌனமாக இருக்கிறார். ரோகினி தியேட்டர் உரிமையாளர் பன்னீர் செல்வத்தை நேரில் அழைத்து விஜய் பேசி இருக்கிறார். சேதமடைந்த பொருட்களின் மதிப்பு தொகையை விஜய் கொடுக்கவும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் அந்த தியேட்டரின் உரிமையாளர் விஜய்யின் தீவிர ரசிகர்.

Also Read:தயங்கிய விஜய், கட்டாயப்படுத்திய லோகேஷ்.. ஒரே வார்த்தையில் சர்ச்சைக்கு வைத்த முற்றுப்புள்ளி

Trending News