வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கோப்ரா பட தோல்வியை அன்றே கணித்த விஜய்.. பாம்பு ரொம்ப நேரம் படம் எடுத்தா கீறி கிட்ட தோத்து போகும்

நேற்று ரிலீசான சீயான் விக்ரமின் கோப்ரா திரைப்படம் அந்த அளவுக்கு பாசிட்டிவ் விமர்சனங்களை பெறவில்லை. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விக்ரமின் தியேட்டர் ரிலீசான இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு ரெஸ்பான்ஸை கொடுக்கவில்லை. டி மாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் இயக்குனர் அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்கினார்.

இந்த படத்திற்கான தோல்வியை தளபதி விஜய் எப்பவோ கணித்து விட்டார் என்றே சொல்லலாம். நடிகர் விஜய் எப்போதுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை கணித்து செயல்படுபவர். ஒரு சில நடிகர்களை போல தேவையில்லாமல் எதையும் முயற்சி செய்யாமல் தனக்கு என்ன செட் ஆகிறதோ அதை ரசிகர்களுக்கு ஏற்றார் போல் திரையில் காட்டுபவர்.

Also Read: அந்நியன் முதல் கோப்ரா வரை விக்ரமிற்கு இத்தனை தோல்வி படங்களா? அதல பாதாளத்திற்கு சரிந்த மார்க்கெட்

சறுக்கல்கள் எல்லோருக்குமே உண்டு. விஜய்யும் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சில தோல்வி படங்களை கொடுத்தவர் தான். ஆனால் அதிலிருந்து மீண்டு வந்து, ரசிகர்களின் பல்ஸ் பிடித்து அவர்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் திரையில் கொண்டு வந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக பாக்ஸ் ஆபீஸ் கிங்காக இருந்து வருகிறார்.

அப்பவே நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பேசிய தளபதி விஜய், இளம் இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைத்தார். அதாவது தான் எல்லா புது படங்களையும், இயக்குனர்களையும் பாத்து வருவதாகவும், இயக்குனர்கள் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்களோ அதை முடிந்த அளவிற்கு இரண்டரை மணி நேரத்தில் சொல்லி முடித்து விடுங்கள் என்று கூறியிருந்தார். தியேட்டருக்கு வருபவர்கள் படத்தை பார்க்க வர வேண்டுமே தவிர வாட்சை பார்க்க கூடாது என்று சொன்னார்.

Also Read: நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி கோப்ரா செய்த முதல் நாள் வசூல்.. இத்தனை கோடியா?

பாம்பு கூட ரொம்ப நேரம் படம் எடுத்தால் கீறி கிட்ட தோத்து போய் விடும் என்றும், அது போல படம் எவ்வளவு நன்றாக எடுத்தாலும் ரன்னிங் டைம் அதிகமாக இருந்தால் அது ரசிக்க கூடியதாக இருக்காது என்றும் விஜய் கூறினார்.

விக்ரமின் கோப்ரா படம் நெகடிவ் விமர்சனங்களை பெற்றதற்கு ஒரு பெரிய காரணமாக சொல்லப்படுவது அந்த படத்துடைய ரன்னிங் டைம் தான். கிட்டத்தட்ட 3 மணி நேரம் ரன்னிங் டைம் என்பது படத்தின் சுவாரஸ்யத்தை குறைத்து விட்டது.

Also Read: 3 வருட போராட்டம், அடிமேல் அடி வாங்கும் விக்ரம்.. கோப்ரா படக்குழு செய்த 5 சொதப்பல்கள்

Trending News