திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

‘மாஸ்டர்’ எமோஜியை வெளியிட்ட தளபதி விஜய்.. தாறுமாறான ட்விட்டர் பதிவு!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜயின் ரசிகர்கள் நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கும் படம்தான் மாஸ்டர்.

இந்தப் படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், மாஸ்டர் படத்தின் எமோஜியை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டு தளபதி ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

ஆகையால் மாஸ்டர் படத்தின் சிறப்பு எமோஜியை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

மேலும் இது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆக்கப்பட்டு வருகிறது. #MasterFilm, #VijayTheMaster, #மாஸ்டர், #మాస్టర్, #MasterPongal உள்ளிட்ட ஹேஷ் டேக்குகளுக்கு மாஸ்டர் படத்தின் எமோஜி வடிவமைக்கப்பட்டுள்ளது.

master-emoji-cinemapettai

இதேபோல்தான் ஏற்கனவே தளபதி விஜய்யின் மெர்சல், பிகில் போன்ற படங்களுக்கு சிறப்பான எமோஜி ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

எனவே வரும் ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகவிருக்கும் மாஸ்டர் படத்திற்காக விழி மேல் விழி வைத்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு தற்போது வெளியான இந்த எமோஜியை வைத்து தங்கள் புத்தாண்டை தளபதி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

- Advertisement -

Trending News