வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

திடீரென டிரண்டாகும் ஸ்டாலினுடன் விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. 25 வருடங்களுக்கு முன் செய்த காரியம்!

தமிழ் சினிமாவில் கைவசம் ஏராளமான ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் நடிகர் விஜய்யும் ஒருவர். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விஜய் குறித்து எந்த தகவல் வெளியானாலும் உடனே அதை இணையத்தில் டிரண்டாக்கி விடுவார்கள்.

விஜய்யின் புதிய படம் குறித்த அறிவிப்பு அல்லது படத்தின் பர்ஸ்ட் லுக் என எது வந்தாலும் அன்றைய தினம் ட்விட்டரில் விஜய் தான் முதலிடத்தில் இருப்பார். அந்த அளவிற்கு ரசிகர்கள் விஜய்யை கொண்டாடி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகர் விஜய் தமிழக முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்களுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. 1996-இல் சென்னை மேயராக இருக்கும் போது 100 மூட்டை அரிசி கொடுத்துள்ளார் தளபதி விஜய் அப்போது எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் தற்போது திடீரென இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இறுதியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பீஸ்ட் என்ற படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

stalin-vijay
stalin-vijay

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 அன்று வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Trending News