திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

திடீரென தளபதி இறக்கிய புதிய கார்.. வீட்டிலிருக்கும் பழைய ரோல்ஸ்- ராய்ஸை ஒதுக்க காரணம்

Thalapathy Vijay suddenly bought a new car: ‘தளபதி விஜய்’ என சொன்னாலே காது கிழியும் அளவுக்கு கத்தும் ரசிகர்கள் ஏராளம். அந்த அளவிற்கு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் தான் நடிகர் விஜய். இவர் சினிமாவில் தன்னுடைய கேரியரை துவங்கிய காலம் முதலே கார், பைக் பிரியராக இருந்துள்ளார்.

விஜய்க்கு விலையுயர்ந்த கார், பைக் என்றால் அதிக பிரியம். அதுவும் கார் கலெக்ஷனில் இவரை மாஸ்டர் என்றே சொல்லலாம். இவரிடம் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோல்ஸ்- ராய்ஸ் கார் ஒன்று உள்ளது. இதன் மதிப்பு மட்டும் ரூ.6 கோடி பெறும்.

ஏற்கனவே தன்னுடைய வீட்டில் ஏகப்பட்ட கார்களை வரிசையாக நிறுத்தி வைத்திருக்கும் விஜய், இப்போது பழைய ரோல்ஸ்-ராய்ஸை ஒதுக்கி வைத்துவிட்டு புதிதாக திடீரென்று ஒரு காரை இறக்கி உள்ளார். இதற்கு முக்கியமான காரணம் ஒன்றும் உள்ளதாம். தற்போது புது வரவாய் வந்துள்ள BMW i7 xDrive 60 என்ற புது ரக காரை விஜய் வாங்கி உள்ளார். எலக்ட்ரானிக் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரின் விலை ரூபாய் 2.30 கோடி.

Also Read: விஜய்யிடம் செம திட்டு வாங்கிய வெங்கட் பிரபு.. ஆழம் தெரியாமல் காலை விட்டுட்டேனே!

திடீரென்று புதிய கார் வாங்கிய தளபதி விஜய்

தற்சமயம் எலக்ட்ரானிக் ரக கார்கள் தான் மார்க்கெட்டை தன்வசப்படுத்துகிறது. இது தளபதிக்கும் பிடித்துப் போனதால்தான் விஜய் தன்னுடைய பழைய ரோல்ஸ்-ராய்ஸை ஒதுக்கி வைத்துவிட்டு இப்போது பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக்கல் காரை வாங்கி, அதில் தான் சூட்டிங் செல்ல விரும்புகிறார்.

இப்போது விஜய் லியோ படத்தின் வெற்றிக்கு பிறகு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் பிரம்மாண்டமான படமான ‘தி கோட்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தளபதி விஜய்யின் பிறந்த நாளான வரும் ஜூன் 22ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

தளபதி விஜய் வாங்கிய புதிய கார் 

vijay-new-car-cinemapettai
vijay-new-car-cinemapettai

Also Read: விஜய்க்காக அடுத்த படம் பண்ண போகும் 5 டைரக்டர்ஸ்.. பிடிக்கவில்லை என்றாலும் விடாமல் துரத்தும் வேதாளம்!

Trending News