தமிழகம் முழுவதும் மாஸ்டர் படமானது போகிப்பண்டிகை அன்று ரிலீஸ் செய்யப்பட்டு தாறுமாறான வசூலை குவித்து வருகிறது.
ஏனென்றால் மாஸ்டர் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இந்நிலையில் தளபதி விஜய் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே பெருமளவு எழுந்த நிலையில், அதற்கு விடை தற்போது கிடைத்துள்ளது.
ஏனென்றால் தளபதி விஜய் கடந்த 13ஆம் தேதியன்று தேவி தியேட்டருக்கு வந்து ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்தபடி மாஸ்டர் படத்தை கண்டுகளிக்கும் சிசிடிவி வீடியோ காட்சியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோவை தளபதி ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.