சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மிட்நைட்டில் ரகசிய வேலை பார்க்கும் விஜய்.. அரசியல் மாநாட்டுக்கு தளபதி குறி வைக்கும் 3 இடங்கள்

Thalapathy Vijay will choose a place for his first  political conference: தமிழகத்து முன்னோடிகள் பலரும் சினிமாவை ஒரு ஊடகமாக கொண்டு அதன் மூலம் அரசியல் நுழைவை உறுதிப்படுத்தி மக்களால் அவர்களும், அவர்களால் மக்களும் பயன் பெற்றனர் எனலாம். எம்ஜிஆர் தொண்டர்களுக்கு கூறியது போல் நாம் மக்களை விரும்பினால், மக்கள் நம்மை விரும்புவார்கள் என்றார். மக்களுக்கு சேவை செய்யவே நல்ல உள்ளங்கள் பலரும் அரசியலுக்கு நுழைய, காலம் அவர்களை அரசியல்வாதியாக மாற்றி விடுவதே உண்மை.

தமிழ் சினிமாவில் அதிக சம்பளத்துடன் முதல் தரத்தில் இருக்கும் நடிகர் இளைய தளபதி விஜய் அவர்கள் அரசியலுக்கு இஷ்டப்பட்டு வரவில்லை என்றாலும் கஷ்டப்பட்டு ஒரு வழியாக வந்து விட்டார். காலத்தின் கட்டாயத்தினால் தளபதி, தலைவர் ஆக உருவெடுத்துள்ளார்.

தமிழக வெற்றி கழகம் மக்களுக்காக உதயமாகியது. இதற்காக சினிமாவை கொஞ்சம் ஓரம் கட்டி தான் எடுத்த காரியத்தில் தடைகளை தகர்த்து முன்னேறிக் கொண்டிருக்கிறார் தளபதி. லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றாகிவிட்டது. அடுத்ததாக 2026 சட்டசபை தேர்தல் என்பதே இலக்கு என்று நோக்குடன் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளார் தளபதி.

Also read: குட் பை சொல்லும் விஜய், தத்தளிக்கும் விடாமுயற்சி.. கல்லா கட்ட திசை திரும்பும் தியேட்டர்கள்

மன்னனே ஆனாலும் மக்களிடம் போய் சேர்ந்தால்தான் மன்னனுக்கு மதிப்பு! இந்த தத்துவம் மன்னராட்சிக்கு மட்டுமல்ல மக்களாட்சிக்கும்தான். மக்களை நேரடியாக சந்தித்து இவரது கொள்கைகளை விவரித்தால் மட்டுமே மக்களின் மனதில் இடம்பெற முடியும், ஓட்டு வாங்க முடியும்.

இந்த ஃபார்முலாவை அரசியல் அனுபவசாலிகள் மூலம் கற்றுக்கொண்ட விஜய் தனது கட்சி சார்பாக மாநாடு நடத்த திட்டமிட்டு உள்ளார் இதற்காக தான் ஒப்புக் கொண்டிருக்கும் விஜய் 68 படத்தின் படப்பிடிப்பை வேக வேகமாக நடத்த சொல்லிக் கட்டளை இட்டுள்ளாராம்.

ஒவ்வொரு முறையும் விஜய்யின் தந்தை சந்திரசேகர், விஜய் படத்தின் ரிலீஸின் போது வேளாங்கண்ணி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் அங்க போய் முட்டி போட்டு படி ஏறி  பிரார்த்தனை பண்ணுவாராம். இப்பொழுது விஜய்யும் அதையே பாலோ பண்ணுகிறாராம். மிட்நைட்டில் கூட்டம் இல்லாத நேரத்தில் வேளாங்கண்ணிக்கு போய் வருவாராம். அவருக்கு அது ஒரு சென்டிமென்ட்

முதல் கட்சி மாநாடும் அவரது பேச்சும் வரலாற்றில் பதியப் போவதால் அதற்கான இடத்தை தேர்ந்தெடுக்க நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளாராம். அதன்படி சென்னையில் அல்லாது, தென் மாவட்டங்களில் தனது முதல் மாநாட்டை துவக்க உள்ளதாக தகவல். 

அரசியல் பெரும்புள்ளிகளின் தொடக்கமாக மதுரை இருப்பதால், மதுரை முதல் சாய்ஸ். சென்டிமென்டாக பார்க்கும் போது வேளாங்கண்ணி, நாகப்பட்டினம் அல்லது கடலூர் ஆக தான் இருக்கும் என்கிறார்கள் விஜய்யின் நல விரும்பிகள். அடுத்ததாக திருச்சி, நெல்லை போன்ற மாவட்டங்களை  மூன்றாம் தரத்திலும் வைத்துள்ளதாக தகவல். மாநாடு எங்க நடந்தாலும் பிரியாணி கன்ஃபார்ம். 

Also read: தளபதி 69 படத்தை நிராகரித்த இயக்குனர்.. கைவசம் ரெண்டு படங்கள் இருப்பதால் விஜய்க்கு ஏற்பட்ட அவமானம்

Trending News