வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கம்மென்றும் உம்மென்றும் மாறிய வாரிசு படக்குழு.. சொந்தக்குரலில் பாடிய பாடலுக்காக விஜய் விட்ட டோஸ்

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படங்களில் ஒன்று தளபதி விஜய்யின் வாரிசு. பல வருடங்களுக்கு பிறகு விஜய் காதல், ஆக்சன், செண்டிமெண்ட் நிறைந்த குடும்ப பின்னணி கதையில் நடிக்கிறார். இயக்குனர் வம்சி இயக்கிய வாரிசு திரைப்படம் வரும் பொங்கலன்று ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் வாரிசு படப்பிடிப்பு தளத்திலிருந்து அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் லீக்காகி கொண்டிருந்தது. இதனால் படப்பிடிப்பு தளத்திற்கு பயங்கர பாதுகாப்பு கொடுக்கப்பட்டது. ஸ்பாட்டில் யாரும் செல்போன்கள் உபயோகிக்க கூடாது என பல ரெஸ்ட்ரிக்ஸன்கள் கொண்டு வரப்பட்டது.

Also Read: அதிகமாகிக் கொண்டே போகும் விரிசல்.. விஜய்யிடம் கட் அண்ட் ரைட்டாக பேச போகும் மாமனார்

இதற்கிடையில் இரண்டு நாட்களுக்கு முன் வாரிசு படத்தின் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையதளத்தில் கசிந்தது. இத்தனை பாதுகாப்புகளை இடையே வீடியோ வெளியானது அந்த ஒட்டுமொத்த படக்குழுவுக்குமே அதிர்ச்சியாகவே இருந்தது.

இந்த சம்பவத்தால் நடிகர் விஜய் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்று விட்டாராம். செட்டில் இருந்த அத்தனை பேருக்கும் பயங்கர டோஸ் விட்டிருக்கிறார். காரணம் என்னவென்றால் அந்த பாடல் விஜய் தன்னுடைய சொந்தக்குரலில் பாடியிருக்கிறார். இது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட்டாக இருக்க வேண்டும் என்று நினைத்த பிளான் சொதப்பி விட்டது.

Also Read: இதுவரை பார்க்காத கோபத்தில் விஜய்.. வாரிசு படக்குழுவினருக்கு நெருப்பை காட்டிய இளையதளபதி

இதனால் பயங்கர டென்ஷன் ஆன விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாதுகாப்பில் இருந்த ஜிம் பாய்ஸ் பக்கம் வந்து அவர்களிடம் கோபத்தை நெருப்பாக கக்கி இருக்கிறார். விஜயை இப்படி ஒரு கோபத்தில் இதுவரை யாருமே பார்த்ததில்லை. பின்பு லைட் மேன்கள் தான் செல்போனில் மூலம் வீடியோ எடுத்திருக்கிறார்கள் என தெரிந்து, லைட் மேன்களை லைட் செட் செய்த பின் வெளியே அனுப்பிவிட்டு இன்டோரில் ஷூட்டிங் நடத்தி இருக்கிறார்கள்.

பொதுவாகவே தளபதி விஜய் ஆரம்ப காலங்களில் அவர் நடிக்கும் படங்களில் ஏதாவது ஒரு பாடலை பாடி விடுவார். பின்னாட்களில் விஜய் பாடுவது என்பது கொஞ்சம் அரிதாகிவிட்டது. இப்போது மீண்டும் சொந்த குரலில் பாடுவதை விஜய் ட்ரெண்ட் ஆக்கி இருக்கிறார்.

Also Read: விஜய்யுடன் கூட்டணி போடும் பாலிவுட் இயக்குனர்.. தளபதி 68-க்கு காசை வாரி இறைக்கும் தயாரிப்பாளர்

Trending News