செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஓவரா ஆட்டம் காட்டும் வாரிசு படக்குழு.. ரசிகர்கள் என்ன முட்டாளா? பொங்கி எழுந்த நெட்டிசன்கள்

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது. வாரிசு படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பாக தில் ராஜு தயாரித்து வருகிறார். தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த படத்தில் விஜய் தன்னுடைய சொந்த குரலில் பாடியும் இருக்கிறார். கடந்த தீபாவளியன்று இந்த படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு வரும் பொங்கலன்று படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.

Also Read: வெளிநாடுகளில் வியாபாரம் ஆகாத துணிவு.. ஓவர்சீஸ் பிசினஸில் வாரிசை 50% கூட தொடமுடியாத அஜித்

இந்நிலையில் இன்று காலை வாரிசு படத்தின் அப்டேட் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ரசிகர்கள் அத்தனை பேரும் பயங்கர குஷியாக இருந்தனர். காலை 10.45 மணி அளவில் அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வாரிசு படத்தின் சிங்கிள் ப்ரோமோ இன்று மாலை ரிலீஸ் ஆகும் என அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.

மாலையில் ரிலீஸ் ஆகும் ப்ரோமோவுக்கு காலையில் ஒரு அப்டேட் கொடுப்பது அதுவும் ஒரு பாடலின் ப்ரோமோவுக்கு இப்படி அப்டேட் கொடுப்பதெல்லாம், வாரிசு படக்குழு கொஞ்சம் ஓவர் ஆட்டம் போடுவது போல் தெரிவதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றன. இதுவரை வேறு எந்த படத்திற்கும் இப்படியெல்லாம் அப்டேட் வந்ததில்லை.

Also Read: அஜித்திற்கு மிக நெருக்கமான 5 பேர்.. ஆரம்பத்தில் இருந்தே நல்லதை மட்டுமே கற்றுக் கொடுத்த வில்லன் நடிகர்

சமீபத்தில் தான் நடிகர் அஜித்தின் துணிவு படமும் பொங்கலன்று ரிலீஸ் ஆவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் இணையத்தில் முட்டி மோதிக் கொண்டிருக்கும் நிலையில் அஜித் ரசிகர்களை வெறுப்பேற்றவே வாரிசு படக்குழு இப்படி ஒரு பிளான் போட்டு இருப்பது போல் தெரிகிறது.

varisu-single-update
varisu-single-update

கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு அஜித்தும், விஜயும் நேரடியாக பொங்கலுக்கு திரையில் மோத இருப்பதால் ஏற்கனவே கோலிவுட் முழுக்க இந்த இரண்டு படங்கள் தான் ஹாட் டாக்காக இருக்கின்றன. இந்நிலையில் இது போன்ற அப்டேட்டுகள் இணையத்தை இன்னும் கலவரமாக்கி கொண்டு இருக்கின்றன.

Also Read: அஜித்தின் தூக்கத்தை கெடுத்த வாரிசு படத்தின் ஓவர் ஆல் பிஸ்னஸ்.. ரிலீஸுக்கு முன்பே டஃப் கொடுக்கும் தளபதி

Trending News