திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வாரிசு ரிலீஸ் தேதியை லாக் செய்த தளபதி.. எந்த அலப்பறையும் இல்லாமல் விலகிய அஜித்தின் AK61

தளபதி விஜயின் வாரிசு மற்றும் அஜித் குமாரின் 61 வது படம் என இரண்டு படங்களுக்கும் ஒரே நேரத்தில் சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு படங்களுமே கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தில் இருப்பதால் ரசிகர்கள் எதிர்பார்த்த மாதிரியே இவர்களது படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆக ரெடியாகி கொண்டிருக்கின்றன.

அஜித் மற்றும் விஜய் சமகால போட்டியாளர்களாக இருந்தாலும் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக இருவரது படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகவில்லை. கடைசியாக 2014 ஆம் ஆண்டு தளபதியின் ஜில்லா படமும் அஜித்தின் வீரம் படமும் ஒரே மாதிரி பொங்கல் அன்று ரிலீஸ் ஆகி தியேட்டர்களை தெறிக்கவிட்டன.

Also Read: விஜய்க்கு நேர்மாறாக இருக்கும் அஜித்.. கொஞ்சம் கூட சளைக்காமல் செய்யும் பெரிய தியாகம்

அது போன்ற ஒரு பொங்கலை தான் இப்போது அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து கொண்டிருந்தனர். ஒரு பக்கம் வாரிசு படத்தின் கதையை ஓரளவுக்கு கெஸ் செய்த ரசிகர்கள், அஜித்தின் 61 வது படத்தை பற்றி பற்றி எந்த கணிப்பும் இல்லாமல் இருக்கின்றனர். இன்னும் படத்திற்கு தலைப்பும் உறுதியாகவில்லை.

இந்நிலையில் தளபதி விஜயின் வாரிசு படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகும் என படக்குழுவிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் பயங்கர எதிர்பார்ப்புகளுக்கு இடையில் அஜித்தின் படம் குடியரசு தினம் அல்லது பிப்ரவரியில் ஒரு வார இறுதியில் ரிலீஸ் ஆகும் என இந்த போட்டியில் இருந்து விலகி இருக்கிறது.

Also Read: 200 கோடி பட்ஜெட்டில் அஜித்-விஜய் இணையும் படம்.. கால்ஷீட்காக காத்திருக்கும் தயாரிப்பாளர்!

இயக்குனர் வம்சி இயக்க, நடிகர் விஜயுடன் ராஷ்மிகா மந்தனா , பிரகாஷ்ராஜ், குஷ்பு, ஷ்யாம், யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என இசையமைப்பாளர் தமன் தெரிவித்திருந்த நிலையில் இப்போது பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிறது.

அஜித்தின் 61 வது படம் ‘துணிவே துணை’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகின. இந்த படத்தை H.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அக்டொபரில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்து இருக்கிறது.

Also Read: 10 முறை நேருக்கு நேராக மோதிக்கொண்ட அஜித், விஜய் படங்கள்.. அதிக வெற்றி யாருக்கு தெரியுமா?

Trending News