Vijay: எந்த ஒரு தமிழ் நடிகர்களும் சிவாஜி கணேசன் மாதிரி நல்ல நடிகராக வரவேண்டும் என்று துளி கூட ஆசைப்படுவதாக தெரியவில்லை. எம்ஜிஆர் போன்று சினிமாவில் இருந்து அரசியலுக்கு வரவேண்டும் என்று தான் தொடர்ந்து ஒவ்வொரு நடிகர்களும் பயணித்து வருகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலம் வேற, விஜய் காலம் வேறு.
அதாவது எம்ஜிஆர் சினிமாவிற்குள் நுழைந்தது 40 வயதில் தான். அத்துடன் அவருடைய நடிப்பு மற்றும் மக்களுக்கு சொல்லும் கருத்தின் மூலம் சினிமாவில் இதயக்கனியாக ஆதிக்கம் பண்ண ஆரம்பித்தார். அதன் பின் இவருடைய நல்ல எண்ணத்தால் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நல்ல விஷயங்களை செய்து வந்தார்.
மேலும் இவருடைய அரசியல் பயணத்திற்கு அண்ணாதுரை மற்றும் கருணாநிதி அடித்தளம் அமைத்தார்கள். அத்துடன் பத்து வருடமாக உழைத்து மக்களின் நம்பிக்கையை பெற்றார். அதனால் கிட்டத்தட்ட 20 வருஷம் கட்சிப்பணியை சரிவர செய்து 60 வயதில் முதலமைச்சராக ஆனார்.
ஆனால் விஜய்யோ, சினிமாவில் வெறும் கமர்சியல் படங்களை நடித்து அதன் மூலம் ஹிட் கொடுத்ததனால் மட்டுமே பிரபலமாகி இருக்கிறார். இது ஒன்று போதும் என்ற நம்பிக்கையில் நேரடியாக அரசியலில் இறங்கி விட்டார்.
அந்த வகையில் எம்ஜிஆர் பத்து வருடமாக அரசியலில் இறங்கி உழைத்த ஒரு விஷயத்தை, விஜய் மூன்றே நாளில் 50 லட்சம் மக்களை கட்சியில் இணைத்து விட்டதாக கூறப்படுகிறது.
இது மட்டும் உண்மையாக இருந்தால் நிச்சயமாக தவிர்க்க முடியாத அரசியல்வாதியாக மாறிவிடுவார். ஆனால் இப்பொழுது கிடைத்த உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் அதை சரியாக ஓட்டு உரிமையாக நிலைநிறுத்திக் காட்டுவார்களா என்பது தான் கேள்விக்குறியாக இருக்கிறது.
இன்னும் இரண்டு வருடங்கள் சட்டமன்றத் தேர்தல் வருவதற்கு இருக்கிறது. அட்லீஸ்ட் அதற்குள்ளேயாவது விஜய் ஒரு அரசியல்வாதியாக மக்களிடம் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.
அத்துடன் எங்கே என்ன ஒரு பிரச்சனை நடந்தாலும் அதற்கு குரல் கொடுக்கும் ஒரு சாதாரண மனிதராக வந்தால் கூட மக்கள் மனதில் இடம் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. பார்க்கலாம் இப்பதான ஆரம்பித்து இருக்கிறது இவருடைய அரசியல் பயணம் எப்படி எல்லாம் கொண்டு வருகிறார் என்று.