தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.
தளபதி 65 படத்தை இயக்க பல இளம் இயக்குனர்கள் போட்டி போட்ட நிலையில் கடைசியாக அனிருத் சிபாரிசில் நெல்சன் தேர்வு செய்யப்பட்டார். மேலும் நெல்சன் கூறிய கதையை தளபதியை மிகவும் இம்பிரஸ் செய்துவிட்டதாம்.
பக்கா கமர்சியல் என்டர்டெயின்மென்ட் படமாக உருவாக இருக்கும் தளபதி 65 படத்தில் சண்டை காட்சிகள் பிரமாண்டமாக வரவேண்டும் என விஜய் விருப்பப்பட்டுள்ளாராம். மேலும் நெல்சன் முதல் முறையாக ஒரு முழுக்க முழுக்க அதிரடி படத்தை கையில் எடுக்க உள்ளார்.
இதனால் ஆக்ஷன் காட்சிகள் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக சமீபத்தில் கேஜிஎஃப் படத்தில் பணியாற்றிய அன்பறிவு என்ற இரட்டையர்களை சண்டை பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யவுள்ளதாம் படக்குழு.
கேஜிஎஃப் படத்தின் சண்டைக்காட்சிகள் ரசிகர்களிடையே எவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். அந்த வகையில் தளபதி 65 படத்தையும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறது படக்குழு.
வருகின்ற ஏப்ரல் மாதம் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ள நிலையில் வெறும் இரண்டே மாதத்தில் மொத்த படப்பிடிப்பையும் முடித்து விட வேண்டும் என நெல்சனுக்கு உத்தரவிட்டுள்ளாராம் தளபதி விஜய்.