வருடத்திற்கு இரண்டு படங்கள் நடிக்க வேண்டும் என முடிவு செய்துள்ள முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களும் இனி வருடத்திற்கு ஒரு படமாவது வெளிவருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
விஜய் நடிப்பில் தளபதி 65, ரஜினி நடிப்பில் அண்ணாத்த, அஜித் நடிப்பில் வலிமை போன்ற படங்கள் தற்போது உருவாகி வருகின்றன. இதில் வலிமை மற்றும் அண்ணாத்த படங்களின் படப்பிடிப்பு தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.
ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பில் வந்த பிரச்சனை அனைவருக்குமே தெரியும். கொரானா, ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது என அந்த படப்பிடிப்பு தடைபட்டு தற்போதுதான் மீண்டும் ஐதராபாத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீண்டும் கொரானா பரவல் காரணமாக விரைவில் படப்பிடிப்பை கைவிட வேண்டிய சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்கிறது பட வட்டாரம்.

ஆனால் அதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட தற்போது வரை இறுதி கட்டத்தை முடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் அஜித்தின் வலிமை. இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு பாக்கி உள்ள நிலையில் வெளிநாடு செல்ல முடியாமல் தவித்து வருகிறது.
அதைப்போல் தளபதி விஜய்யின் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பில் இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டதாகவும் அவர்களை தனிமைப்படுத்தி விட்டு மீதமுள்ளவர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தி வருவதாகவும் கூறுகின்றனர்.

ஜார்ஜியாவில் படப்பிடிப்பில் இருக்கும் தளபதி 65 படக்குழுவினர் சென்னை திரும்பினாலும் சென்னையில் தற்போது ஊரடங்கு கொஞ்சம் கொஞ்சமாக அமல்படுத்தப்பட்டு வருவதால் தளபதி 65 படப்பிடிப்பு நடக்குமா என்பது சந்தேகம் தான். இந்த நிலை தொடர்ந்தால் கண்டிப்பாக ரஜினி, அஜித், விஜய் ஆகியோரின் படங்கள் 2022ஆம் ஆண்டு தான் வெளியாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.