ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

விஜய்க்கு கைக்கு சென்ற 4 இயக்குனர்களின் லிஸ்ட்.. எதிர்பார்ப்பை இரட்டிப்பாகும் தளபதி 66

மாஸ்டர் படத்திற்குப் பிறகு தளபதி விஜய்யின் தளபதி 65 படத்தைப் பற்றிய செய்திகள் அதிகம் வெளிவரும் என்று பார்த்தால் தளபதி 66 படத்திற்கான செய்திகள்தான் கோலிவுட் வட்டாரங்களை பதம் பார்த்துக் கொண்டிருக்கிறது.

நாளுக்கு நாள் தளபதி 66 படத்தின் எதிர்பார்ப்புகள் ரசிகர்களை தூங்க விடவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த அளவுக்கு தினமும் ஒரு இயக்குனரின் பெயர் அடிபட்டு வருகிறது. மேலும் தளபதி 66 படத்தைத் தயாரிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.

ஏற்கனவே விஜய் தளபதி 66 படத்திற்காக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைய உள்ளதாக செய்திகள் வந்தன. இதனை விஜய் ரசிகர்கள் இணையதளங்களில் கொண்டாடித் தீர்த்தனர். ஆனால் தற்போது முன்னணி தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்று தளபதி விஜய்யை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படம் தயாரிப்பதற்காக விஜய்க்கு அட்வான்ஸ் கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இதற்காக தளபதி விஜய்க்கு நான்கு இளம் இயக்குனர்களின் லிஸ்ட் கொடுக்கப்பட்டுள்ளதாம். அதில் முதலிடம் லோகேஷ் கனகராஜுக்கு தான். அதனைத் தொடர்ந்து தல அஜித்தின் விருப்பமான இயக்குனராக வலம் வரும் வினோத் இடம் பெற்றுள்ளார்.

மேலும் விஜய்யின் ஆஸ்தான இயக்குனர் அட்லீயின் பெயரும் அடிபடுகிறது. இந்நிலையில்தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் மேலும் ஒரு இளம் இயக்குனர் இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை. சீயான் விக்ரமை வைத்து கோப்ரா படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் அஜய் ஞானமுத்து தான்.

thalapathy66-cinemapettai
thalapathy66-cinemapettai

இதில் விஜய் யாரை தேர்வு செய்வார் என்பதை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலும் ரசிகர்களின் 70 சதவீத ஓட்டு கிடைத்தது என்னமோ லோகேஷ் கனகராஜுக்கு தான்.

Trending News