செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

புளிச்சு போன 7 வருட திருமண வாழ்க்கை.. தளபதியின் ஆஸ்தான நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா.?

Actor Vijay: நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே தமிழில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்ற இவர் விஜய், அஜித், கமல், விக்ரம் போன்ற அனைத்து ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்திருக்கிறார். அதிலும் விஜய்க்கும் இவர்தான் ஆஸ்தான நாயகி. இப்படி கோலிவுட்டில் வெற்றி நாயகியாக இருக்கும் போதே பாலிவுட் ஆசையில் ஹிந்தி பக்கம் சென்றார். ஆனால் அது ஒர்க் அவுட் ஆகவில்லை.

அந்த நடிகை தான் அசின். பெரிய அளவில் வெற்றி படங்களை கொடுக்காத இவர் ராகுல் ஷர்மா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இவர் மைக்ரோமேக்ஸ் கம்பெனியின் இணை நிறுவனர் ஆவார். திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு குட்பை சொன்ன இவர் தன் கணவரின் பிசினஸில் உதவி செய்து வந்தார்.

Also read: வாயினால் அழிந்து நாசமான 5 நட்சத்திரங்கள்.. பாலிவுட் தான் முக்கியம் என எல்லாத்தையும் இழந்த அசின்

இப்படி புளியங்கொம்பாக பார்த்து செட்டிலான இவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்த சூழலில் இவர் தன்னுடைய ஏழு வருட திருமண வாழ்வை முடித்துக் கொள்ளப் போகிறார் என வெளிவந்திருக்கும் செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

தனக்கு ஏற்ற சரியான ஜோடியை இவர் திருமணம் செய்து கொண்டதால் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கிறார் என்று பலரும் நினைத்து வந்தனர். ஆனால் இப்போது இப்படி ஒரு செய்தி வெளிவந்திருக்கும் நிலையில் இதற்கான காரணம் என்ன என்ற கேள்வியையும் முன்வைக்கிறது. அதன்படி ராகுல் ஷர்மாவுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது அசினுக்கு தெரிய வந்திருக்கிறது.

Also read: அசின், அனுஷ்காவை செஞ்சு விட்ட ஹரி.. ரகசியத்தை போட்டு உடைத்த பிரியா பவானி சங்கர்

அதைத்தொடர்ந்து கணவரை கண்டித்து வந்த அவர் ஒரு கட்டத்திற்கு மேல் அவரை திருத்த முடியாது என்பதால் தன் குழந்தையுடன் அம்மா வீட்டிற்கு வந்து விட்டாராம். தற்போது தன் அம்மா அப்பாவுடன் வசித்து வரும் அசின் விரைவில் விவாகரத்து கோரி நீதிமன்றத்தையும் நாட இருக்கிறாராம்.

சமீப காலமாகவே சமந்தா, தனுஷ், அமலா பால் உள்ளிட்ட பலர் விவாகரத்து பெற்று வருகின்றனர். அந்த வரிசையில் அசினும் தற்போது இணைந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தகவல் அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை என்றாலும் கிட்டதட்ட உறுதியான தகவலாகவே இருக்கிறது. ஏனென்றால் அசின் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் திருமண போட்டோக்கள் அனைத்தையும் நீக்கி இருக்கிறார். அந்த வகையில் இந்த விவாகரத்து செய்தி உண்மையா என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும்.

Also read: சூர்யா கூட நடிக்க மாட்டேன்னு மறுத்த நடிகை.. அந்த ரோலே வேண்டாம் என நிராகரித்த கியூட் நடிகை

Trending News