வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கடைசி படத்தால் நொந்து நூடுல்ஸ் ஆன விஜய்.. இழுபறியில் தளபதி 68 படப்பிடிப்பு

Thalapthy 68: தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்திற்கு பிறகு விஜய் தன்னுடைய 68 ஆவது படப்பிடிப்பு வேலைகளை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். மேலும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த இரண்டு தகவல்களும் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதியாகி இருக்கின்றன.

லியோ படத்தின் எல்லா வேலைகளும் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் விஜய் தற்போது டப்பிங் வேலைகளில் பிஸியாக இருப்பதாக சொல்லப்படுகிறது. தளபதி 68 வெங்கட் பிரபுவுடன் உறுதியானதோடு அதைப்பற்றி வேறு எந்த தகவல்களும் வெளியாகவில்லை. எப்போதுமே ரொம்ப வெளிப்படையாக பேசும் இயக்குனர் வெங்கட் பிரபு எந்த இடத்திலும் இந்த படத்தைப் பற்றி வாயை திறக்காமல் மௌனம் சாதித்து வருகிறார்.

Also Read:வில்லன் இல்லாமல் விஜய் ஹிட் கொடுத்த 5 படங்கள்.. சந்தர்ப்ப சூழ்நிலையையும் சாதகமாகிய தளபதி

ஆனால் சமீபத்தில் வெளிவரும் தகவலின்படி தளபதி விஜய்க்கு வெங்கட் பிரபு உடன் படம் பண்ணுவதற்கு தற்போது மிகப்பெரிய குழப்பமாக இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் அவருடைய கடைசி படமான கஸ்டடி தான். இந்த படத்திற்கு ஏகப்பட்ட பில்டப் கொடுக்கப்பட்டு ரிலீஸ் ஆன பின் மண்ணை கவ்வியது. இந்த படத்தை இப்போதுதான் தளபதி விஜய் பார்த்திருக்கிறார்.

கஸ்டடி திரைப்படத்தை பார்த்த பிறகு தளபதி விஜய்க்கு வெங்கட் பிரபுவின் கதைக்களத்தின் மீது அவ்வளவாக நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதாம். தளபதி 62 கதை ஒரு வருடத்திற்கு முன்பே விஜய் ஓகே சொன்னதால், அறிவிப்பையும் வெளியிட்டு விட்டார். உண்மையை சொல்லப்போனால் வெங்கட் பிரபுவிற்கு மாநாடு திரைப்படத்திற்கு பிறகு வெளியான மன்மத லீலை மற்றும் கஸ்டடி அட்டர் பிளாப்பாக அமைந்தது.

Also Read:விஜய்யின் கொஞ்ச நஞ்ச மானத்தை மொத்தமாக வாங்கிய எஸ்ஏசி.. வாரிசு வசூல் உண்மையா?

அஜித் குமாருக்கு ஒரு மங்காத்தா, சிம்புவுக்கு ஒரு மாநாடு போல் விஜய்க்கு இந்த படம் அமையும் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் தற்போது இந்த கூட்டணியில் திருப்தி இல்லாமல் இருக்கிறார் தளபதி. அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்து வருகிறாராம். எப்படி இந்த கூட்டணியுடன் படம் பண்ணுவது, எப்படி வெற்றி அடைவது என்று தெரியாமல் மிகப்பெரிய குழப்பத்தில் இருக்கிறார்.

தளபதி விஜய்யின் பிறந்தநாளின் போது இந்த படத்தின் பூஜையை வைத்துக் கொள்ளலாம் என்று வெங்கட் பிரபு சொன்னதற்கு விஜய் மறுத்துவிட்டாராம். மேலும் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆகவும் தளபதி 68 சார்பில் எதுவும் வெளியாகவில்லை. இதனால் விரைவில் இந்தக் கூட்டணி மாற வாய்ப்புள்ளதாகவும், அதனால்தான் பட பூஜை தள்ளி போவதாகவும், இன்னும் ஒரு வாரத்தில் இது பற்றிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

Also Read:விஜய்யின் அரசியலை குறிவைத்து தட்டித் தூக்க நினைக்கும் அஜித்.. அடுக்கடுக்காக போட்டு இருக்கும் மாஸ்டர் பிளான்

Trending News