திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அதிரடியான ட்விஸ்ட் வைத்த லியோ லோகேஷ்.. தள்ளிப்போகும் தளபதி-68, பதட்டத்தில் வெங்கட் பிரபு

Leo- Thalapthy 68: இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு அவரே எதிர்பார்க்காத அதிர்ஷ்டமாக அமைந்தது தான் தளபதி 68. நடிகர் அஜித்குமாரை வைத்து மங்காத்தா படம் கொடுத்த வெங்கட் பிரபுவுக்கு, சமீபத்தில் வெற்றி படங்கள் எதுவுமே அமையவில்லை. மாநாடு திரைப்படத்திற்கு பிறகு இவர் கேரியர் அவ்வளவுதான் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த பொழுது யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தளபதி விஜய் பட அறிவுப்புடன் மீண்டும் களம் இறங்கினார்.

இந்த படம் அறிவிப்பு வந்ததிலிருந்து தளபதி விஜய் ரசிகர்களுக்கு வெங்கட் பிரபு தளபதிக்கு மங்காத்தா, மாநாடு போன்ற வெற்றி படத்தை கொடுப்பாரா அல்லது வழக்கம் போல் சொதப்பி விடுவாரா என்ற மிகப்பெரிய பயம் இருந்து வருகிறது. நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் ஜெய் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

Also Read:ரத்தினவேலுக்கு முன்பே அவர் அப்பாவை கொண்டாடிய 6 படங்கள்.. விஜய் மார்க்கெட்டை தூக்கி விட்ட இயக்குனர்

லியோ படம் ரிலீஸுக்கு பிறகு இரண்டு மாத ஓய்வெடுத்து விட்டு விஜய் தளபதி 68 படத்தை ஆரம்பிப்பார் என தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது இந்த பிளானுக்கு ஆப்பு வைக்கும் வகையில் லியோ படத்தை வேறு மாதிரி திட்டம் போட்டிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதனால் வெங்கட் பிரபு மிகப்பெரிய கலக்கத்தில் இருக்கிறார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தளபதி விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் வரும் அக்டோபர மாதம் ரிலீஸ் ஆக திட்டமிடப்பட்டு இருக்கிறது. படத்தின் ஒட்டுமொத்த வேலைகளும் முடிந்துவிட்ட நிலையில், நடிகர் விஜய்யை தவிர மொத்த படக்குழுவும் காஷ்மீருக்கு சென்று இருக்கிறது. படத்தின் பேட்ஜ் வேலைகளுக்காக சென்று இருக்கிறது.

Also Read:யுவன் சங்கர் ராஜாவை குஷிபடுத்திய தளபதி.. சுயநலத்திற்காக யாரும் செய்யாததை செய்த விஜய்

இந்த நேரத்தில் லியோ படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் முடிவெடுத்து இருக்கிறாராம். ஏற்கனவே லோகேஷ் கனகராஜுக்கு கைதி, விக்ரம் படங்களின் இரண்டாவது பாகங்கள் லைன் அப்பில் காத்திருக்கிறது. இந்த வேளையில் தற்போது லியோ படமும் இரண்டாவது பாகமாக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது.

தற்போதைய தகவலின்படி லியோ படம் முடியும் பொழுது இறுதி காட்சியில் இரண்டாவது பாகத்திற்கான டீசர் ஒளிபரப்பப்படும் என்றும், படத்தின் வெற்றியை பொறுத்து இரண்டாம் பாகம் 2025 லிருந்து 2026க்குள் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிகிறது. மேலும் கைது மற்றும் விக்ரம் 2 படங்களை வெப் சீரிஸ் ஆக எடுக்கவும் திட்டமிட்ட இருப்பதாக சொல்லப்படுகிறது.

Also Read:பல வருடம் கழித்து ஆண் குழந்தைக்கு அம்மாவான விஜய் பட நடிகை.. வைரலாகும் வித்தியாசமான பெயர்

Trending News