புதன்கிழமை, ஜனவரி 22, 2025

ரஜினியை பிடிக்காதவர்கள் செய்யும் நச்சு வேலை.. தளபதியை வைத்து ஆடும் ஆடுபுலி ஆட்டம்

Rajinikanth – Vijay: தமிழ் சினிமாவில் தற்போது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வரும் பிரச்சனை என்றால் அது சூப்பர் ஸ்டார் சர்ச்சை தான். ஒரு பக்கம் விஜய் தான் சூப்பர் ஸ்டார், ஒரு பக்கம் ரஜினி தான் சூப்பர் ஸ்டார் என்று அங்கங்கே பிரபலங்கள் பேசிக்கொண்டு இருக்க, அதே நேரத்தில் சினிமா சம்பந்தப்பட்ட யாரை பார்த்தாலும் மீடியாக்களில் இருப்பவர்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்தை பற்றி உங்களுடைய கருத்து என்ன என கேட்டு ஒட்டுமொத்தமாக இந்த ஒரு வட்டத்திற்குள்ளே சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

சமீபத்தில் ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவின் போது ரஜினிகாந்த் பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக மாறியது. ரஜினி எப்போதும் போல தன்னுடைய படங்களின் ஆடியோ வெளியீட்டு விழாவில் எப்படி பேசுவாரோ, அதேபோன்று பேசியதை கூட ரஜினி, விஜய் பற்றி தான் பேசுகிறார், விஜய்க்கு பதிலடி கொடுத்திருக்கிறார் என கொளுத்தி போட்டு விட்டார்கள்.

Also Read:200 நாட்களுக்கு மேல் தியேட்டரில் கொடி கட்டி பறந்த ரஜினியின் 8 படங்கள்.. சூப்பர் ஸ்டாருக்கு போட்டி இவரே தான்

ரஜினிகாந்த் தன்னைத்தானே நான் தான் சூப்பர் ஸ்டார், எனக்குத்தான் முதலிடம் என நிரூபித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பது போல் ஒரு மாய பிம்பத்தை தற்போது தமிழ் சினிமா உலகில் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் மற்றொரு பக்கம் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களை தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் உண்மையில் இதையெல்லாம் ரஜினி மற்றும் விஜய்யின் ஆதரவாளர்கள் செய்யவில்லை. ரஜினியை பிடிக்காதவர்கள் அவருக்கு எதிராக விஜய்யை தூண்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூப்பர் ஸ்டார் சர்ச்சையை முதலில் தொடங்கியது சரத்குமார் தான். வாரிசு படத்தின் போது அவர் கிளப்பிவிட்டது தான் தற்போது மிகப்பெரிய விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. சரத்குமாருக்கு பொதுவாக ரஜினியை பிடிக்காது என்பது தான் இதற்கு காரணம்.

Also Read:கடைசி மூச்சு இருக்க வர நடிச்சுக்கிட்டே தான் இருப்பேன்.. ரஜினிக்கு வரிசை கட்டி நிற்கும் 10 படங்கள்

இதேபோன்று ரஜினியை பிடிக்காத நிறைய பேர் விஜய்யின் மூலம் ரஜினியை அசிங்கப்படுத்தவே இப்படி செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு ரஜினி பதில் சொல்வதை விட தளபதி விஜய் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொண்டு, எனக்கு இந்த பட்டம் எல்லாம் தேவையில்லை என ஒரு வார்த்தை சொன்னாலே இந்த ஒட்டு மொத்த பிரச்சனையும் முடிவுக்கு வந்துவிடும்.

தளபதி விஜய் மௌனம் காத்து வருவதால் தான் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் இந்த பிரச்சனை தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. ஒருவேளை இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம் என விஜய் இருக்கிறாரா, அல்லது அவருடைய அடுத்த கட்ட அரசியல் நகர்வு அல்லது அவருடைய மார்க்கெட்டுக்கு இந்த பட்டம் தேவைப்படுவதால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் என தெரியவில்லை.

Also Read:ரஜினியை வைத்து விஜய்க்கு பதிலடி கொடுத்து எஸ்ஏசி.. வந்த வழி மறந்தோம்னா காணாம போயிடுவோம்

Trending News